கொரோனா பேரிடருக்கு இடையிலும் வருவாயை குவித்த தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறை..
கொரோனா பேரிடருக்கும் இடையே வருவாயை அள்ளிக் குவித்துள்ளது தமிழ்கா பத்திரப்பதிவுத் துறை.
கொரோனா பேரிடருக்கும் இடையே வருவாயை அள்ளிக் குவித்துள்ளது தமிழ்கா பத்திரப்பதிவுத் துறை.
நடப்பு நிதியாண்டில் ஜனவரி 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலக்கட்டத்தில் ரூ.10785.44 கோடி வருவாயாக பத்திரப் பதிவுத் துறை ஈட்டியுள்ளது. இது கடந்த 2018 - 2019 நிதியாண்டில் ஜனவரி 31 ஆம் தேதியுடனான காலக்கட்டத்தில் ஈட்டப்பட்ட வருவாயைவிட மிகவும் அதிகம்.
ஜனவரி 31 ஆம் தேதியுடனான காலக்கட்டத்தில் 2019 நிதியாண்டில் ரூ.8,937.45 கோடி, 2020 நிதியாண்டில் ரூ.9,145.06 கோடி, 2021 நிதியாண்டில் ரூ.7,927.3 கோடி என வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து, ஜோன்ஸ் லேங் லாஸெல் ஸ்ட்ராடெஜிக் கன்சல்டிங் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஏ.சங்கர் கூறுகையில், "2020 மார்ச்சில் கொரோனா பாதித்த பின்னர் ரியல் எஸ்டேட் மார்க்கெட்டில் பெரும் பள்ளம் விழுந்தது. அந்த சுணக்கமான காலக்கட்டத்தில் காசிருந்தும் வீடு, சொத்து வாங்க நினைத்தவர்களுக்கு அது முடியவில்லை. அந்தத் தேக்கிவைக்கப்பட்ட தவிப்புகள் நிலைமை சற்று சரியானதும் சொத்து வாங்குவதையும் விற்பதையும் அதிகரித்தது.
அதனாலேயே இரண்டாவது அலையின் ஊடேயும் தமிழகத்தில் பத்திரப்பதிவு வருவாய் அதிகரித்துள்ளது" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், கடந்த இரண்டு காலாண்டு நிதியாண்டுகளில் விற்பனை அதிகமாக இருந்தது. பத்திரப்பதிவு அமைச்சரும், முதன்மைச் செயலரும் பத்திரவுப் பதிவுத் துறையினருடன் பலக்கட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினர்.
ஒவ்வொரு ஆலோசனைக் கூட்டத்திலும் சரியான ஆவணத்தை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். பத்திரப் பதிவில் தாமதமே இருக்கக் கூடாது. தணிக்கை செய்து சரியான பதிவுத் தொகையைப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
இது முறையாக அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் பின்பற்றப்பட்டது. இதனாலேயே தமிழக பத்திரப்பதிவுத் துறையின் வருமானம் பேரிடரிக்கும் மத்தியில் கணிசமாக அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் தமிழகத்தில் பத்திரப்பதிவு மற்றும் ஸ்டாம்ப் ட்யூட்டி கட்டணம் அதிகமாக இருப்பதும் வருவாய் அதிகரிப்பிற்குக் காரணம் என்று அவர் கூறினார்.
மோதிலால் ஆஸ்வால் நிதி மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் முதல் நவம்பர் 2021 வரையிலான காலக்கட்டத்தில் பத்திரப்பதிவு, ஸ்டாம்ப் ட்யூட்டி வாயிலாக ஈட்டப்பட்ட மொத்த வருவாய் (இந்திய அளவில்) ரூ.1,001 பில்லியன் என்று தெரிவித்துள்ளது.
க்ரெடாய் அமைப்பின் தலைவர் எஸ்.ஸ்ரீதரன் கூறுகையில், வளர்ச்சி என்பது தொழில்துறைக்கு நல்ல சமிக்ஞை. தமிழகத்தில் ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சியை நோக்கிய பயணம் உள்ளது. இருப்பினும் ஸ்டாம்ப் ட்யூட்டியை தமிழகத்தில் குறைக்க வேண்டும் என விரும்புகிறோம். மகாராஷ்டிராவில் உள்ளதைப் போல் குறைக்கலாம். இதனால் நிறைய பதிவுகள் நடக்கும். அப்போதும் பத்திரப்பதிவு வருவாய் அதிகரிக்கும் என்று கூறினார்.