Rain Update : சென்னையில் காலை முதலே கனமழை..! ஆங்காங்கே தூரல்...! என்ன சொல்கிறது வானிலை மையம்..?
Chennai Rains : சென்னையில் நேற்று நள்ளிரவில் இருந்து ஆங்காங்கே கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் தெற்கு ஆந்திரா- வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று நள்ளிரவில் இருந்து ஆங்காங்கே கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி, சென்னை அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, நந்தனம், சைதாப்பேட்டை, ஆலந்தூர், பெருங்குடி, திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் தற்போது வரை மழை பெய்து வருகிறது.
முன்னதாக, தமிழ்நாடு மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 15, 2022
இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இன்று கனமழைக்கு வாய்ப்பு
திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை,விருதுநகர், தென்காசி,ராமநாதபுரம், சிவகங்கை, கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை:
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னதுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.