மேலும் அறிய

TN Rain Alert : அடுத்த 3 மணி நேரம்.. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்..? லேட்டஸ்ட் அப்டேட்...!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு  மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருபத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர், ராமநாதபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை நிலவரம்

29.06.2023 மற்றும் 30.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

01.07.2023 மற்றும் 02.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

03.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

வங்கக்கடல் பகுதிகள்: 

29.06.2023 மற்றும் 30.06.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

01.07.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு  வங்கக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

02.07.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபட்டுள்ளோம்" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா; தஞ்சையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு நிர்வாகிகள் மரியாதை
அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா; தஞ்சையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு நிர்வாகிகள் மரியாதை
"அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்".. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
நல்ல சம்பளம்! முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
நல்ல சம்பளம்! முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபட்டுள்ளோம்" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா; தஞ்சையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு நிர்வாகிகள் மரியாதை
அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா; தஞ்சையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு நிர்வாகிகள் மரியாதை
"அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்".. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
நல்ல சம்பளம்! முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
நல்ல சம்பளம்! முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
India, Pakistan இடையே மீண்டும் கிரிக்கெட்.. இஸ்லாமாபாத்தில் முக்கிய மீட்டிங்.. ஜெய்சங்கர் பேசியது என்ன?
India, Pakistan இடையே மீண்டும் கிரிக்கெட்.. இஸ்லாமாபாத்தில் முக்கிய மீட்டிங்.. ஜெய்சங்கர் பேசியது என்ன?
TN Rain Updates: இந்த பகுதி மக்கள் உஷார்.! நாளை 6, நாளை மறுநாள் 14 மாவட்டங்களில் கனமழை இருக்கு.!
இந்த பகுதி மக்கள் உஷார்.! நாளை 6, நாளை மறுநாள் 14 மாவட்டங்களில் கனமழை இருக்கு.!
சுடசுட பிரியாணி.! தூய்மை பணியாளர்களுக்கு, பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.!
சுடசுட பிரியாணி.! தூய்மை பணியாளர்களுக்கு, பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.!
புதுச்சேரியில் புதிய கணக்கு போடும் விஜய்.. எம்ஜிஆர் சாதித்ததை, விஜயால் சாதிக்க முடியுமா ? என்ன திட்டம் ?
புதுச்சேரியில் புதிய கணக்கு போடும் விஜய்.. எம்ஜிஆர் சாதித்ததை, விஜயால் சாதிக்க முடியுமா ? என்ன திட்டம் ?
Embed widget