மேலும் அறிய

TN Rain Alert: உருவான ’மிதிலி' புயல்! தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை...வானிலை மையம் வார்னிங்!

தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

உருவான ‘மிதிலி’ புயல்

நேற்று (16-11-2023) மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த  காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடகிழக்கு திசையில்  நகர்ந்து இன்று (17-11-2023) காலை 05.30 மணி அளவில்  வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ‘மிதிலி’ புயலாக வலுப்பெற்று,  காலை 08.30 மணி அளவில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு  வங்கக்கடல் பகுதிகளில் பரதீப்பிலிருந்து (ஒரிசா) சுமார் 250  கிலோ மீட்டர் கிழக்கு-வடகிழக்கே, டிகாவிலிருந்து  (மேற்கு வங்கம்) சுமார் 180 கிலோ மீட்டர் கிழக்கு-தென்கிழக்கே, கேப்புபாராவிலிருந்து (வங்கதேசம்) சுமார் 180  கிலோ மீட்டர் தென்மேற்கே நிலை கொண்டுள்ளது.  இது வடக்கு-வடகிழக்கு திசையில்  நகர்ந்து இன்று (17-11-2023) இரவு வங்கதேச கடற்கரையை கேப்புபாராவிற்கு அருகில் கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும்  இலங்கை பகுதிகளில்  ஒரு  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி  நிலவுகிறது. இதன் காரணமாக, 

17.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

18.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

19.11.2023: கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

20.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

21.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

22.11.2023 மற்றும் 23.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும்.  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs CAN LIVE Score: இந்தியா - கனடா மோதல்..குறுக்கே வந்த மழை..டாஸ் போடுவதில் தாமதம்!
IND vs CAN LIVE Score: இந்தியா - கனடா மோதல்..குறுக்கே வந்த மழை..டாஸ் போடுவதில் தாமதம்!
Breaking News LIVE: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி.
Breaking News LIVE: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி!
Petrol Diesel Price Hike: பேரதிர்ச்சி! பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Vikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOSSuriya Political Entry | அரசியலில் குதிக்க ரெடி விஜயுடன் மோதும் சூர்யா?உள்ளாட்சி தேர்தலில் போட்டியா?Anti Caste Marriage | சாதி மறுப்பு திருமணம் சூறையாடப்பட்ட CPIM OFFICE நெல்லையில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs CAN LIVE Score: இந்தியா - கனடா மோதல்..குறுக்கே வந்த மழை..டாஸ் போடுவதில் தாமதம்!
IND vs CAN LIVE Score: இந்தியா - கனடா மோதல்..குறுக்கே வந்த மழை..டாஸ் போடுவதில் தாமதம்!
Breaking News LIVE: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி.
Breaking News LIVE: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி!
Petrol Diesel Price Hike: பேரதிர்ச்சி! பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
Factcheck : கச்சத்தீவு மீட்பு ஆலோசனை குழுவின் தலைவராக அண்ணாமலையை நியமித்தாரா பிரதமர் மோடி?
Factcheck : கச்சத்தீவு மீட்பு ஆலோசனை குழுவின் தலைவராக அண்ணாமலையை நியமித்தாரா பிரதமர் மோடி?
Vijay Sethupathi :  நான் என்னை தான் ரொம்ப மிஸ் பண்றேன்.. வைரலாகும் விஜய் சேதுபதி பேச்சு
நான் என்னை தான் ரொம்ப மிஸ் பண்றேன்.. வைரலாகும் விஜய் சேதுபதி பேச்சு
PM Modi:
"இதய ஆரோக்கியத்திற்கு சக்ராசனம் செய்யுங்கள்" நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்!
Cinema Headlines: மகாராஜா முதல் நாள் வசூல்.. வைரமுத்து, ஹிப் ஹாப் ஆதி தந்த அட்வைஸ்.. சினிமா செய்திகள் இன்று!
Cinema Headlines: மகாராஜா முதல் நாள் வசூல்.. வைரமுத்து, ஹிப் ஹாப் ஆதி தந்த அட்வைஸ்.. சினிமா செய்திகள் இன்று!
Embed widget