மேலும் அறிய

TN Rain Alert : இன்னைக்கு செம்ம மழை இருக்கு.. 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. கூலான வானிலை அப்டேட் இதோ...!

தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

1. தமிழக கடலோரப்பகுதிகளின் மேல்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

2. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை 6-ஆம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக அப்பகுதிகளில் 7-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 8-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.

15 மாவட்டங்களுக்கு கனமழை

05.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல்,  கிருஷ்ணகிரி,  திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

06.05.2023 மற்றும் 07.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

08.05.2023 மற்றும் 09.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை : 

06.05.2023 முதல் 09.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 4  டிகிரி செல்சியஸ் உயரக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35–36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  

லக்கூர் (கடலூர்) 16, வேப்பூர் (கடலூர்), மொடக்குறிச்சி (ஈரோடு) தலா 11, சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) 10, லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), திருச்சுழி (விருதுநகர்), பரமத்திவேலூர் (நாமக்கல்), பெருங்களூர் (புதுக்கோட்டை), செங்கம் (திருவண்ணாமலை) தலா 9,தொண்டி (ராமநாதபுரம்), காட்டுமயிலூர் (கடலூர்), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), ஈரோடு தலா 8,
திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), தலைவாசல் (சேலம்) தலா 7, திருமயம் (புதுக்கோட்டை), பெலாந்துறை (கடலூர்), அரிமளம் (புதுக்கோட்டை), பாம்பன் (ராமநாதபுரம்), கிளானிலை (புதுக்கோட்டை) தலா 6, தீர்த்தாண்டானம் (ராமநாதபுரம்), கரியக்கோவில் அணை (சேலம்), வேடசந்தூர் (திண்டுக்கல்), நத்தம் (திண்டுக்கல்), வட்டானம் (ராமநாதபுரம்), கேசிஎஸ் மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி) தலா 5, சந்தியூர் KVK AWS (சேலம்), ஆண்டிபட்டி (மதுரை), உடையாளிபட்டி (புதுக்கோட்டை), எலந்தகுட்டைமேடு (ஈரோடு), ராமேஸ்வரம் (இராமநாதபுரம்), காரைக்குடி (சிவகங்கை), ஆர்எஸ்சிஎல்-3 செம்மேடு (விழுப்புரம்), பிலவாக்கல் (விருதுநகர்), ஏத்தாபூர் (சேலம்), கோவிலங்குளம் (விருதுநகர்), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்), ஆனைமடுவு அணை (சேலம்), கள்ளக்குறிச்சி தலா 4 , ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), பஞ்சப்பட்டி (கரூர்), கிருஷ்ணராயபுரம் (கரூர்), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), மீ மாத்தூர் (கடலூர்), நன்னிலம் (திருவாரூர்), காரையூர் (புதுக்கோட்டை), அதனக்கோட்டை (புதுக்கோட்டை), துறையூர் (திருச்சி), கெட்டி (நீலகிரி), சிறுகுடி (திருச்சி), மண்டபம் (ராமநாதபுரம்), திருவாடானை (இராமநாதபுரம்), வம்பன் KVK AWS (புதுக்கோட்டை), ஆலங்காயம் (திருப்பத்தூர்), கீழச்செருவாய் (கடலூர்), அருப்புக்கோட்டை (விருதுநகர்), டேனிஷ்பேட்டை (சேலம்), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), மோகனூர் (நாமக்கல்), சோளிங்கர் (இராணிப்பேட்டை), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), வாடிப்பட்டி (மதுரை), கோமுகி அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி) தலா 3, நம்பியூர் (ஈரோடு), பெருந்துறை (ஈரோடு), மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி), கொடுமுடி (ஈரோடு), பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோவை), திருப்பத்தூர் (சிவகங்கை), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), மீமிசல் (புதுக்கோட்டை), குன்னூர் (நீலகிரி), சத்தியார் (மதுரை), பவானி (ஈரோடு), திண்டுக்கல், கீரனூர் (புதுக்கோட்டை), மானாமதுரை (சிவகங்கை), சிவகங்கை, வாலினோகம் (ராமநாதபுரம்), திருவாரூர், திருச்சி டவுன் (திருச்சி), ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), கிருஷ்ணகிரி, பாலவிதிதி (கரூர்), கடவூர் (கரூர்), ராமநாடு KVK AWS (ராமநாதபுரம்), அகரம் சீகூர் (பெரம்பலூர்), பவானிசாகர் (ஈரோடு) தலா 2, தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), புதுக்கோட்டை, ராசிபுரம் (நாமக்கல்), மாயனூர் (கரூர்), க.பரமத்தி (கரூர்), திருப்புவனம் (சிவகங்கை),  தொழுதூர் (கடலூர்), மணமேல்குடி (புதுக்கோட்டை), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), சங்கரிதுர்கம் (சேலம்), ஓசூர் (கிருஷ்ணகிரி), ஓட்டன்சத்திரம் (திண்டுக்கல்), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), ஆனைப்பாளையம் (கரூர்), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), மரக்காணம் (விழுப்புரம்), பையூர் AWS (கிருஷ்ணகிரி), அவலாஞ்சி (நீலகிரி), பாப்பாரப்பட்டி KVK AWS (தருமபுரி), விருகாவூர் (கள்ளக்குறிச்சி), கெத்தை (நீலகிரி), வி.களத்தூர் (பெரம்பலூர்), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), பாலமோர் (கன்னியாகுமரி), அறந்தாங்கி (புதுக்கோட்டை), மூலனூர் (திருப்பூர்), ஆர்எஸ்எல்-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), அழகரை எஸ்டேட் (நீலகிரி), கல்லணை (தஞ்சாவூர்), தேவகோட்டை (சிவகங்கை), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சி), இலுப்பூர் (புதுக்கோட்டை), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), பொன்னமராவதி (புதுக்கோட்டை), பாலர் அணைக்கட்டு (இராணிப்பேட்டை), பர்லியார் (நீலகிரி), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), மதுக்கூர் (தஞ்சாவூர்), மைலம்பட்டி (கரூர்),  ராமநாதபுரம், குடிமியான்மலை (புதுக்கோட்டை), நகுடி (புதுக்கோட்டை), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), கமுதி (இராமநாதபுரம்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), உதகமண்டலம் (நீலகிரி), குன்னூர் PTO  (நீலகிரி), பொன்னனியாறு அணை (திருச்சி), அரவக்குறிச்சி (கரூர்), குமாரபாளையம் (நாமக்கல்), கவுந்தப்பாடி (ஈரோடு), தத்தியெங்கர்பேட்டை (திருச்சி), சுத்தமல்லி அணை (அரியலூர்), கரூர், திருச்செங்கோடு (நாமக்கல்),), காரியாபட்டி (விருதுநகர்), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), துவாக்குடி (திருச்சி), ஹரூர் (தருமபுரி) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

05.05.2023:  குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மன்னார் வளைகுடா பகுதிகள்,  தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள், தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

06.05.2023:  குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள்,  தமிழக கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு  -  தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகள்,  தெற்கு அந்தமான் கடல்  பகுதிகளின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

07.05.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
தெற்கு அந்தமான் கடல்  பகுதிகள், தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

08.05.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகள்,  தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகள்,  இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

09.05.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்திலும்  மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல்,  மத்திய வங்கக்கடல் மற்றும்  அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆழ் கடலிலுள்ள மீனவர்கள் 07.05.2023 தேதிக்குள்  கரைக்கு திரும்புமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
Embed widget