மேலும் அறிய

Rain Alert: நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் விளாசப்போகும் கனமழை!

தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு இலங்கையை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் நாளையும், நாளை மறுநாளும் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

காற்றழுத்த தாழ்வு மண்டலம்:

தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்கு திசையில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 11 கிமீ வேகத்தில் நகர்ந்து திருகோணமலைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 380 கி.மீ மற்றும் காரைக்காலில் இருந்து 610 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டு உள்ளது.

இது இன்று மாலை வரை மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. அதன்பின், படிப்படியாக மேற்கு தென்மேற்கு திசையில் திரும்பி நாளை இலங்கைக் கடற்கரையைக் கடக்க உள்ளது. 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெங்கு மழை..? 

அடுத்த 3 மணிநேரத்தில் தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரை கடக்கும்...!

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை இலங்கையில் கரையை கடக்கிறது.  

இதன் காரணமாக, 31.01.2023: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள்  தமிழக மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும்  இடிமின்னலுடன் கூடிய லேசான /   மிதமான மழை   பெய்யக்கூடும். 

01.02.2023: தென்தமிழக மாவட்டங்களில் அநேக  இடங்களிலும்,  வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களிலும்  இடிமின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

02.02.2023: தென்தமிழக மாவட்டங்களில் அநேக  இடங்களிலும்,  வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களிலும்  இடிமின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். 
 
03.02.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் லேசான /   மிதமான மழை   பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

31.01.2023: இலங்கை மற்றும்  தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்,  மன்னார் வளைகுடா மற்றும்  அதனை ஒட்டிய குமரி கடல்  பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  

01.02.2023: இலங்கை மற்றும்  தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள்,  மன்னார் வளைகுடா மற்றும்  அதனை ஒட்டிய குமரி கடல்  பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  

02.02.2023: இலங்கை மற்றும்  தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள்,  மன்னார் வளைகுடா மற்றும்  அதனை ஒட்டிய குமரி கடல்  பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.  ஆழ் கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
போராடும் செவிலியர்கள் பணி நிரந்தரம்? பொங்கலுக்கு முன் பணி நியமன ஆணை- அமைச்சர் மா.சு. முக்கிய தகவல்!
போராடும் செவிலியர்கள் பணி நிரந்தரம்? பொங்கலுக்கு முன் பணி நியமன ஆணை- அமைச்சர் மா.சு. முக்கிய தகவல்!
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
போராடும் செவிலியர்கள் பணி நிரந்தரம்? பொங்கலுக்கு முன் பணி நியமன ஆணை- அமைச்சர் மா.சு. முக்கிய தகவல்!
போராடும் செவிலியர்கள் பணி நிரந்தரம்? பொங்கலுக்கு முன் பணி நியமன ஆணை- அமைச்சர் மா.சு. முக்கிய தகவல்!
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
Gold Silver Rates Dec.22nd: ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
Embed widget