TN Chennai Weather: சென்னையில் உதிக்காத சூரியன் - தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை
TN Chennai Weather: சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு மத்தியில் தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் இன்று (May 5) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.

TN Chennai Weather: சென்னையில் தற்போது வரை மேகமூட்டத்துடன் குளிர்ச்சியான சூழலே நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வானிலை மையம் எச்சரிக்கை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக
05-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
06-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
07-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
08-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
09-05-2025 மற்றும் 10-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை மாறுதலின் போக்கு:
05-05-2025 முதல் 08-05-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிபடியாக குறையக்கூடும்.
அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
05-05-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
06-05-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
இன்று (05-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29' செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.
சென்னை மக்கள் மகிழ்ச்சி:
கோடை வெயில் சுட்டெரித்து பகல் நேரங்களில் வெளிய முடியாத அளவில் மக்களை வீட்டிலேயே முடக்கி வந்தது. இந்நிலையில் நேற்று மாலை சில்லென்ற காற்றுடன் நகர் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் மழையின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஏசி இல்லாமலேயே வீடுகளில் மக்கள் நிம்மதியாக உறங்கினர். கோடைகாலங்களில் வழக்கமாக ஆறுமணிக்கெல்லாம் சூரியனின் பறந்து விரிந்த கதிர்கள் நம்மை அச்சப்படுத்து. ஆனால், இன்று விடிந்து நீண்ட நேரம் ஆகியும் வெயிலின் தாக்கம் தெரியாமல் குளிர்ச்சியான சூழலே நிலவுகிறது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.





















