மேலும் அறிய

TN Rain Alert: சென்னையில் அதிகாலையில் வெளுத்த மழை - இன்று தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யலாம்? வானிலை அறிக்கை

TN Rain Alert: சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலையில் கனமழை வெளுத்து வாங்கியது.

TN Rain Alert: வங்கக்கடலில் வரும் 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழை:

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை கனமழை கொட்டியது. அண்ணாசாலை, ராயப்பேட்டை, தியாகராய நகர், ஆயிரம் விளக்கு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி மற்றும் கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. அதேநேரம், ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சில இடங்களில் மோட்டார்களை கொண்டு தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:

காலை 10 மணி வரையில்,திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை,, மதுரை, ராமநாதபுரம், ராமநாதபுரம் ஆகிய 21 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக” மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் எச்சரிக்கை:

19.10.2024: தமிழகத்தில் ஒருசில  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.
 
20.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
 
21.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில்   ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
 
22.10.2024: தமிழகத்தில் ஒருசில  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.
 
23.10.2024: தமிழகத்தில் ஒருசில  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.
 
சென்னையில் மழைக்கு வாய்ப்பு: 

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது /  மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:   

வங்கக்கடல் பகுதிகள்:

20.10.2024: அந்தமான் கடல்  பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 
 
அரபிக்கடல் பகுதிகள்:
 
19.10.2024: கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகள், மத்தியகிழக்கு, அதனை ஒட்டிய மத்தியமேற்கு மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும்  லட்சத்தீவு பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
 
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் - முதலமைச்சர் ஸ்டாலின் கிடுக்குப்பிடி கேள்வி, ஆளுநர் பதில் அளிப்பாரா?
CM Stalin: தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் - முதலமைச்சர் ஸ்டாலின் கிடுக்குப்பிடி கேள்வி, ஆளுநர் பதில் அளிப்பாரா?
Breaking News LIVE 19th OCT 2024: முதலமைச்சர் ஸ்டாலின் அடுக்கிய கேள்விகள் - பதிலளிப்பாரா ஆளுநர்?
Breaking News LIVE 19th OCT 2024: முதலமைச்சர் ஸ்டாலின் அடுக்கிய கேள்விகள் - பதிலளிப்பாரா ஆளுநர்?
"ஆளுநருக்கு எதிராக இனவாத கருத்துக்கள் தெரிவிப்பதா?" முதல்வர் ஸ்டாலினுக்கு கவர்னர் ரவி பதிலடி!
Rasi Palan Today Oct 19: மிதுனத்துக்கு ஆரோக்கியம் மேம்படும்; கடகத்துக்கு நம்பிக்கை அதிகரிக்கும்: உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today: மிதுனத்துக்கு ஆரோக்கியம் மேம்படும்; கடகத்துக்கு நம்பிக்கை அதிகரிக்கும்: உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் - முதலமைச்சர் ஸ்டாலின் கிடுக்குப்பிடி கேள்வி, ஆளுநர் பதில் அளிப்பாரா?
CM Stalin: தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் - முதலமைச்சர் ஸ்டாலின் கிடுக்குப்பிடி கேள்வி, ஆளுநர் பதில் அளிப்பாரா?
Breaking News LIVE 19th OCT 2024: முதலமைச்சர் ஸ்டாலின் அடுக்கிய கேள்விகள் - பதிலளிப்பாரா ஆளுநர்?
Breaking News LIVE 19th OCT 2024: முதலமைச்சர் ஸ்டாலின் அடுக்கிய கேள்விகள் - பதிலளிப்பாரா ஆளுநர்?
"ஆளுநருக்கு எதிராக இனவாத கருத்துக்கள் தெரிவிப்பதா?" முதல்வர் ஸ்டாலினுக்கு கவர்னர் ரவி பதிலடி!
Rasi Palan Today Oct 19: மிதுனத்துக்கு ஆரோக்கியம் மேம்படும்; கடகத்துக்கு நம்பிக்கை அதிகரிக்கும்: உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today: மிதுனத்துக்கு ஆரோக்கியம் மேம்படும்; கடகத்துக்கு நம்பிக்கை அதிகரிக்கும்: உங்கள் ராசிக்கு என்ன பலன்?
"இதுக்கும் ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல" தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. கவர்னர் தரப்பு விளக்கம்!
Bloody Beggar Trailer : கவின் நடித்துள்ல பிளடி பெக்கர் படத்தின் டிரைலர் வெளியானது
Bloody Beggar Trailer : கவின் நடித்துள்ல பிளடி பெக்கர் படத்தின் டிரைலர் வெளியானது
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
"திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி" ஆளுநர் ரவியை சாடிய எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்
Embed widget