TN Power Shutdown: தமிழகத்தில் மின்வெட்டு: முக்கிய பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
மின்சார பராமரிப்பு பணிகள் மற்றும் பழுது பார்க்கும் பணிகள் காரணமாக நாளை 3 மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது

தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் W மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
எந்த நேரத்தில் மின் நிறுத்தம்?
பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அறிவிக்கப்பட்ட இடங்களில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 மணி அல்லது 10 மணியிலிருந்து மாலை 4 அல்லது 5 மணிவரை, மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
மின்வெட்டு ஏற்படும் மாவட்டங்கள்:
சென்னை
போரூர், காரம்பாக்கம், கந்தசாமி நகர், பொன்னி நகர், அருணாச்சலம் நகர், மோதி நகர், பத்மவாஹி நகர், காவேரி நகர், தர்மராஜா நகர், விஸ்வநாதன் தெரு, பிரமனார் தெரு.
திருப்பூர்
உடுமலை காந்திநகர், அண்ணாக்குடியிருப்பு, நேரு வீதி, நகராட்சி அலுவலகம், பூங்கா, ரயில் நிலையம், போலீஸ் குடியிருப்பு, சந்தை, எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மய்வாடி, கணமாணிக்கனூர், குரல்குட்டை, மடத்தூர், மலையாண்டிபட்டினம், மருள்பட்டி, மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
தேனி
பாரகான், சிலமலை, டி.ஆர்.புரம், எஸ்.ஆர்.புரம், சூலபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகள்.
TANGEDCO அதிகாரிகள் மின் தடை செய்யப்படுவதால், மக்கள் தங்களுக்கு தேவையான பணிகளை முன்கூட்டியே செய்து வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.






















