TN Assembly Session LIVE: ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முடிவு கட்டப்படும் - சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு
TN Assembly Session 2022 LIVE Updates: தமிழ்நாடு குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இதுதொடர்பான, அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
LIVE

Background
நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக அடுத்தக்கட்ட நடவடிக்கை - நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம்
நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக ஆலோசிக்க நாளை மறுநாள் சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தப் போவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.
பக்தர்கள் சிவலோகமும் வைகுண்டத்திற்கும் செல்ல வேண்டுமென விரும்பினால், அதற்கு அமைச்சர் சேகர்பாபு வழி காட்டுவார் - அமைச்சர் வேலு
பக்தர்கள் சிவலோகமும் வைகுண்டத்திற்கும் செல்ல வேண்டுமென விரும்பினால், அதற்கு அமைச்சர் சேகர்பாபு வழி காட்டுவார் என பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு தெரிவித்தார்.
முன்னதாக, சேலம் வைகுண்டம் இடையே சாலை அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். அப்போது, குறுக்கிட்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஒ.பன்னீர்செல்வம், வைகுண்டத்தில் சாலை அமைக்க கிருஷ்ண பரமாத்மாவிடம் அனுமதி பெறப்பட்டு விட்டதா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, அமைச்சர் இவ்வாறு பதில் அளித்தார்.
கீழ்வேளூர் தொகுதியில் திருப்பூண்டி அருகே உள்ள கீரனேரி ஏரியை ஆழப்படுத்த வேண்டும் - நாகை மாலி
கீழ்வேளூர் தொகுதியில் திருப்பூண்டி அருகே உள்ள கீரனேரி ஏரியை ஆழப்படுத்த வேண்டும் என்ற கீழ்வேளூர் தொகுதி உறுப்பினர் நாகை மாலி-யின் கோரிக்கை ஏற்கப்படுவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் போதுமான கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன - அமைச்சர் பொன்முடி
அமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்தில் போதுமான கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதில் அளித்தார். ஒட்டப்பிடாரத்தில் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படுமா? என்று உறுப்பினர் சண்முகையா எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.
முதன்முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவை கேள்வி பதில் நேரலை செய்யப்படுகிறது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

