குளித்தலை அருகே கனமழையால் குளம் குடைந்து ஊருக்குள் புகுந்த வெள்ள நீரால் பொது மக்கள் அவதி
ஊராட்சி மன்ற நிர்வாகம் பாப்பையம்பாடி குளம் மற்றும் நீர் வெளியேறும் வடிகால் பாதையினை சரியான முறையில் தூர்வாராமல் இருந்தது இதற்கு காரணம் என மக்கள் குற்றச்சாட்டு.
குளித்தலை அருகே பாப்பையம்பாடியில் தொடர் கனமழையால் குளம் குடைந்து வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து வீடுகளை சூழ்ந்ததால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.
கரூர் மாவட்டத்தில் கடந்த 5 ஐந்து நாட்களாக பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாப்பையம்பாடி பகுதியில் பெய்து வந்த தொடர் கனமழையின் காரணமாக அங்குள்ள குளம் நேற்று இரவு நிரம்பியது.
மேலும் குளம் நிரம்பியதும் குளத்திலிருந்து வெள்ள உபரி நீர் வெளியேறியது தொடர் கனமழையின் காரணமாக வெள்ள உபரி நீர் அதிக அளவில் வெளியேறியதால் ஊருக்குள் புகுந்து சுமார் 10 க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது.
மேலும் அந்த வீடுகளுக்கு செல்லும் பாதையில் வெள்ள மழைநீர் அதிக அளவில் வெளியேறி வருவதால் 10 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வர தவித்து வருகின்றனர். மேலும் வீட்டின் முன்பு கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகள், கோழிகள் கூட நீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
ஊராட்சி மன்ற நிர்வாகம் பாப்பையம்பாடி குளம் மற்றும் நீர் வெளியேறும் வடிகால் பாதையினை சரியான முறையில் தூர்வாராமல் இருந்தது இதற்கு காரணமான பகுதி இப்போது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதே போல் பாலப்பட்டி வழியாக செல்லும் புங்காற்று காட்டுவாரியில் தொடர் மழை காரணமாக தரைப் பாலத்தை மூழ்கியவாறு வெள்ள உபரி நீர் செல்கிறது. அதிக அளவில் வெள்ள உபநீர் செல்வதால் வேங்காம்பட்டி லாலாபேட்டை சாலையில் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் வெள்ள உபரிநீர் அதிக அளவு செல்லும் நிலையில் ஆபத்தினை உணராமல் இரு சக்கர வாகனங்களில் கடந்து செல்கின்றனர். அதே போல் கண்ணாமுத்தாம்பட்டி குளமும் தொடர் கனமழையின் காரணமாக நிரம்பி வழிந்து வெள்ள உபரி நீர் வெளியேறி வருகிறது.