Pongal Festival: வலுக்கும் கட்டுப்பாடுகள் - பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைப்பு
தை திருநாட்களான ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் சென்னையில் 3 நாட்களுக்கு ‘நம்ம ஊர் திருவிழா’(Namma Ooru Thiruvizha) என்ற பெயரில், பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கியதை அடுத்து அந்தந்த மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. ஊரடங்கு அறிவிப்பில் கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் 50 சதவீதம் வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட பொங்கல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுமா என்ற சந்தேகம் இருந்த நிலையில், தற்போது அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. மேலும் படிக்க: ஊரடங்கு அறிவிப்பு: கடை திறக்கலாமா? வாகனம் ஓட்டலாமா? எதற்கெல்லாம் அனுமதி? எதற்கெல்லாம் தடை? இதோ முழு விபரம்!
#BREAKING அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைப்புhttps://t.co/wupaoCQKa2 | #TNLockdown | #lockdown | #TNGovt | #Omicron #Pongal2022 pic.twitter.com/eff3StJMbA
— ABP Nadu (@abpnadu) January 5, 2022
முன்னதாக, தை திருநாட்களான ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் சென்னையில் 3 நாட்களுக்கு ‘நம்ம ஊர் திருவிழா’(Namma Ooru Thiruvizha) என்ற பெயரில், பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை சங்கமம் – திருவிழா, நம்ம தெருவிழா’ என்ற நிகழ்ச்சிக்கு மாற்றாக ‘நம்ம ஊர் திருவிழா’ என்ற பெயரில் பொங்கலன்று 3 நாட்களுக்கு சென்னையில் கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. மேலும் படிக்க: TN Night Curfew : நாளை முதல் தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்