TN Govt Award: அறிவித்தது தமிழ்நாடு அரசு - ரூ.5 லட்சம் பரிசு, யாருக்கு? எப்படி விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்
Kalaignar Ezhudhugol Award: தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் கலைஞர் எழுதுகோல் விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Kalaignar Ezhudhugol Award: தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் கலைஞர் எழுதுகோல் விருது பெறுவோருக்கு, 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசு அறிவிப்பு:
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த தினமான ஜுன் 3ஆம் நாளன்று. ஒரு சிறந்த இதழியலாளருக்கு "கலைஞர் எழுதுகோல் விருது" வழங்கி கௌரவிக்கப்படும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான இவ்விருதுக்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதில் ரூபாய் ஐந்து இலட்சம் பரிசுத் தொகையுடன் பாரட்டுச் சான்றிதழும் அடங்கும்” என தெரிவிக்க்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது !
— TN DIPR (@TNDIPRNEWS) April 11, 2025
தகுதி வாய்ந்த மூத்த பத்திரிகையாளர்களிடமிருந்து ஏப்ரல் 30 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/d232gYHIFz
யார் விண்ணப்பிக்கலாம் - தகுதிகள் என்ன?
கலைஞர் எழுதுகோல் விருதுக்கான தகுதிகள் பின்வருமாறு:
- விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
- தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்திருக்க வேண்டும்.
- பத்திரிகைப் பணியை முழுநேரப் பணியாகக் கொண்டிருக்க வேண்டும்
- இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும், வேண்டும். பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பங்காற்றியிருக்க
- விண்ணப்பதாரரின் எழுத்துகள் ஏற்படுத்தியிருக்க வேண்டும். பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் நேரடியாகவோ, மற்றொருவர் பரிந்துரையின் அடிப்படையிலோ பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரையின் பேரிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம்.
- விண்ணப்பதாரர்களில் ஒருவரே விருதாளராக அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்.
- குழுவின் முடிவே இறுதியானது.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
மேற்காணும் தகுதிகளை கொண்ட விண்ணப்பங்கள், விரிவான தன் விவரங்கள் மற்றும் அவற்றுக்குரிய ஆவணங்களுடன் இயக்குநர். செய்தி மக்கள் தொடர்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 600 009 என்ற முகவரிக்கு 30.04.2025-க்குள்ளாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
கலைஞர் எழுதுகோல் விருது:
கலைஞர் எழுதுகோல் விருது என்பது முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி நினைவாக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் இதழியலாளரொருவருக்கு வழங்கிவரும் விருதாகும். இவ்விருதானது ஒவ்வொரு ஆண்டும் தமிழ் இதழியல் துறை மூலம் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிய சிறந்த இதழியலாளர்க்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பாக வழங்கப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. அதன்படி,
- ஐ. சண்முகநாதன் - 2021
- வி.என்.சாமி - 2022
- சுகிதா சாரங்கராஜ் - 2023
- நக்கீரன் கோபால் - 2023





















