Ganja-Gutka: கஞ்சா,குட்கா விற்பனை செய்தால் குண்டர் சட்டம் - டிஜிபி சையிலேந்திர பாபு எச்சரிக்கை
கஞ்சா,குட்கா விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று டிஜிபி சையிலேந்திர பாபு சுற்றறிக்கை விட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை செய்வோர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று டிஜிபி சையிலேந்திரபாபு சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதன்படி கஞ்சா மற்றும் குட்கா விற்போரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற திட்டம் தொடங்கிய நிலையில் இந்த சுற்றறிக்கையை அவர் அனுப்பியுள்ளார்.
மேலும் பள்ளி,கல்லூரிகள் ஆகியவற்றிற்கு அருகே கஞ்சா உள்ளிட்ட பொருட்களை விற்பதை உடனடியாக தடுக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் பள்ளிகள் அருகே வசிப்பவர்களை கொண்டு ரகசிய வாட்ஸ் அப் குழு உருவாக்கி தகவல்களை சேகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் அவர் ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார்.
#BREAKING | ஆபரேசன் கஞ்சா வேட்டை 2.0
— ABP Nadu (@abpnadu) March 29, 2022
தமிழ்நாட்டில் கஞ்சா / குட்கா விற்பனையில் ஈடுபடுவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்
அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் / மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு#TNDGP #Sylendrababu pic.twitter.com/ohnGSx1mIo
சென்னையில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை மிகவும் அதிகமாக நடைபெற்று வருகிறது என்ற புகார் எழுந்தது. குறிப்பாக பாடி மேம்பாலத்தில் அதிகளவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும் புகார் வந்துள்ளது. அதாவது இந்த மேம்பாலத்தின் கீழ் தூண்களுக்கு இடையே இருக்கும் இடங்களில் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது என்று பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். அவருடைய புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அத்துடன் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் கஞ்சா விற்பனையை தடுக்க ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் அனைத்து உயர் அதிகாரிகளும் முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:3 ஆண்டுகளில் 4 எஸ்.பிக்கள் மாற்றம்...! செங்கை மாவட்டத்தின் புதிய எஸ்.பியாக சுகுணா சிங் பொறுப்பேற்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்