மேலும் அறிய
அடித்தது ஜாக்பாட்: முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு ஓய்வூதியம் உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு

முக.ஸ்டாலின்_(3)
Source : twitter
முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்படும். முன்னாள் எம்.எல்.ஏக்களின் ஓய்வூதியம் ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ35 ஆயிரமாக உயர்த்தப்படும்.
முன்னாள் எம்.எல்.ஏக்களின் மருத்துவ படி ரூ.75 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்படும். மேலும், குடும்ப ஓய்வூதியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.17,500 ஆக உயர்த்தப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















