CM Stalin EXCLUSIVE Interview: மதுவிலக்கு எப்போது? பாஜகவிற்கு தொடங்கிய கவுண்ட்டவுன் - முதலமைச்சரின் மெகா எக்ஸ்குளுசிவ்! 11மணிவரை காத்திருங்கள்!
தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு, ஏபிபி நாடு செய்தி தளத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் (CM MK Stalin EXCLUSIVE Interview to ABP Nadu )பிரத்யேகமாக பதிலளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு, ஏபிபி நாடு செய்தி தளத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிரத்யேகமாக பதிலளித்துள்ளார்.
ஏபிபி செய்திதளம்..!
ஊடகத்துறையில் 100 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் கொண்ட ஏபிபி நிறுவனம், தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியோடு இணையதளங்கள் வாயிலாக பொதுமக்களிடையே நாட்டின் அன்றாட நிகழ்வுகளை கொண்டு சேர்க்கும் முடிவுடன் இணைய ஊடகத்தில் களமிறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தான், கடந்த 2021ம் ஆண்டு ஏபிபி நாடு எனும் இணைய செய்தி தளம் அறிமுகமானது. அதன் மூலம் தமிழ் மக்களுக்கான செய்திகளை வேகமாகவும், துல்லியமாகவும் வழங்கி வருகிறது. இந்நிலையில், உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஏபிபி நாடுவின் பணியை ஊக்குவிக்கும் விதமாக முதன்முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார். அதில் மக்கள் மனதில் தொடரும் சந்தேகங்களை ஏபிபி நாடு கேள்வியாக எழுப்ப, முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கு விரிவான பதில்களை தந்துள்ளார்.
முன்வைக்கப்பட்ட கேள்விகள்:
திமுக அரசுக்கு தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தும் திட்டம் உள்ளதா, எதிரும் புதிருமாக உள்ள கட்சிகளை இணைத்து உருவாக்கும் கூட்டணி பாஜகவிற்கே சாதகமாக அமையுமா மற்றும் பாஜகவை வீழ்த்துவதற்கான வியூகங்கள் என்ன? என்பது போன்ற கேள்விகள் முன் வைக்கப்பட்டன.
முதலமைச்சர் ஸ்டாலின் பதில்..!
ஏபிபி தரப்பில் முன்வக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், பூரண மதுவிலக்கு தொடர்பாகவும் அதற்கான நடவடிக்கைகளையும் விளக்கியுள்ளார். பாஜகவிற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது, ஏன்? என்பது குறித்து விரிவாக பேசியுள்ளார். ”எதிர்கட்சிகளின் கூட்டணியை கண்டு பாஜகவின் நிலைமை இது தான் எனவும், இப்போதைக்கு இது தான் எங்கள் கூட்டணியின் வியூகம். மத்ததெல்லாம்” என காரசாரமாக முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
இன்று காலை 11 மணிக்கு..
மக்கள் சார்பில் ஏபிபி-யால் முன் வைக்கப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த விரிவான பதில்கள் இன்று காலை 11 மணியளவில் முழுமையாக வெளியாக உள்ளன. அதுதொடர்பான செய்திகளையும், வீடியோக்களையும் காண, ஏபிபி நாடு செய்தி தளம் மற்றும் ஏபிபி நாடு யூடியூப் சேனலுடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.