Ungalil Oruvan Book Release LIVE: முதல்வரின் உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழா நேரலை!
MK Stalin Ungalil Oruvan Book Release LIVE Updates: முதல்வரின் ‘உங்களில் ஒருவன் சுயசரிதை நூலை ராகுல்காந்தி இன்று வெளியிடுகிறார். அந்தநிகழ்ச்சி தொடர்பான அப்டேட்டுகளை உடனக்குடன் இங்கு பார்க்கலாம்.
LIVE
Background
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன் சுயசரிதை நூலை ராகுல்காந்தி இன்று வெளியிடுகிறார். அந்தநிகழ்ச்சி தொடர்பான அப்டேட்டுகளை உடனக்குடன் இங்கு பார்க்கலாம். இந்த நிகழ்ச்சி நந்தம்பாக்கத்தில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றுக்கொண்டிக்கிறது.
நிகழ்ச்சி நடக்க இருக்கும் அரங்கு:
நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் அரசியல் தலைவர்கள்
நிகழ்ச்சி அரங்கின் முன்பகுதி:
சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..!
சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..!
கருணாநிதி போல எனக்கு எழுத தெரியாது.. பேசத்தெரியாது.. ஆனால் முயன்று பார்ப்பேன். அதன் வெளிப்பாடுதான் இந்த நூல்
நான் உங்களில் ஒருவன்.. அதை ஸ்டாலின் என்றுமே மறக்க மாட்டேன்.
சிறுவயதில் இருந்தே அரசியல் எனது இரத்தத்தில் இருந்தது.
சிறுவயதிலேயே லட்சியம் இன்னதென்று முடிவெடுத்து, அதை நோக்கி சென்றால் வெற்றி நிச்சயம். அதற்கு நான் சான்று
கலைஞர் நாற்காலியில் நான் உட்காருவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.
கோபாலபுரம் இல்லமே என் சரிதையின் வரலாறு.
எல்லாருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடலின் கோட்பாடு
ஸ்டாலின் என் அண்ணன் - ராகுல்காந்தி உரை..!
ஸ்டாலின் என் அண்ணன் - ராகுல்காந்தி உரை..!
என்னுடைய அண்ணன் மு.க.ஸ்டாலினை பாராட்ட விரும்புகிறேன்.
அவரது வாழ்கை நீண்ட நெடிய போராட்டம்.
மு.க.ஸ்டாலின் ஒரு அருமையான புத்தகத்தை எனக்கு தந்திருக்கிறார்.
எனது அம்மா சோனியா காந்தி ஸ்டாலினுக்கு 69 வயது என்பதை நம்பவே இல்லை..
உடனே நான் எனது தாயாரிடம் அவருக்கு எத்தனை வயது இருக்கும் என்று கேட்டேன்.. அவருக்கு 59 வயது அல்லது 60 இருக்கும் என்றார். அதன் பின் கூகுள் செய்து அவரது வயதை உறுதிப்படுத்திக்கொண்டார்.
அவர் எப்படி இப்படி இளமையாக இருக்கிறார் என்பதை பற்றி ஒரு புத்தகம் எழுத வேண்டும்.
நாடாளுமன்றத்தில் அண்மையில் நான் தமிழ்நாடு பற்றி பேசியது தமிழ்நாட்டில் பெரிதளவில் கொண்டாடப்பட்டது.
அன்று பேசி முடித்த உடன் தமிழ்நாடு என்ற வார்த்தையை அதிகமாக உபயோகப்படுத்தியது ஏன் என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார். உடனே நான் தமிழன் அல்லவா என்று சொன்னேன்.
ஏன் அப்படி பேசினேன் என்று என்னை கேட்டுக்கொண்டேன். அதன் பின்னர்தான் தெரிந்தது எனது இரத்தம் இந்த மண்ணில் கலந்திருக்கிறது என்பது. அப்பாவை இழந்தது எனக்கு சோகமான தருணம்.
தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் வரலாற்றை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை
முதல்வர் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா... பினராய் விஜயன் உரை
படிப்படியாக முதல்வராக உயர்ந்தவர் மு.க.ஸ்டாலின்
இளைஞரணி தலைவராக இருந்து முதல்வராக உயர்ந்தவர் மு.க.ஸ்டாலின்
கூட்டாட்சிக்கு ஆபத்து வரும் போது முதல் ஆளாக வந்து நிற்பவர் மு.க.ஸ்டாலின்
புத்தகத்தில் தனது பிறப்பு, சினிமா, பெரியார் அண்ணாவுடனான உரையாடல்கள், அரசியல் வாழ்கை உள்ளிட்ட பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
திருக்குறளை மேற்கோள் காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை பினராய் விஜயன் பாராட்டினார்.
உங்களில் ஒருவன் அடுத்த பாகங்களுக்காக நான் காத்திருக்கிறேன்.
உங்களில் ஒருவன் தமிழக வரலாற்றையும் சொல்கிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் சுயசரிதை வெளியீட்டு விழா.. உமர் அப்துல்லா உரை.. !
முதல்வர் மு.க.ஸ்டாலின் சுயசரிதை வெளியீட்டு விழா.. உமர் அப்துல்லா உரை.. !
மு.க.ஸ்டாலின் சுயசரிதை பல பாகங்களாக வெளிவரவேண்டும்.
காஷ்மீருக்காக தமிழகம் குரல் கொடுத்ததானால்தான் நான் இங்கு நிற்கிறேன்.
ஜம்மு - காஷ்மீருக்கும் தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
எங்களுடன் தோளோடு தோளோடு நின்றதை நாங்கள் மறக்க மாட்டோம்.
எந்த விதமான ஆடை அணியவேண்டும் என்பது தனிமனித சுதந்திரம்
பல வேற்றுமைகளை கொண்டதுதான் இந்தியா.
மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக தமிழகம் விளங்குகிறது.
ஆளுநர் தமிழகத்தை 3 பிரித்தால் ஏற்கமுடியுமா..?
பல கொள்கைகள் இந்தியா கொண்டிருக்கிறது.
நமது தேசம் மிகவும் நெருக்கடியான காலக்கட்டத்தில் இருக்கிறது.
மக்களின் ஒப்புதலின்றி ஜம்மு காஷ்மீர் இராண்டாக பிரிக்கப்பட்டது.
மக்களிடம் பேசுவதற்காகவே இங்கு வந்திருக்கிறேன்.
முதல்வர் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா.. வைரமுத்து உரை..!
முதல்வர் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா.. வைரமுத்து உரை..!
இந்த மேடை கிடைப்பதற்கரிய மேடை..
இந்தியாவின் தேசிய நட்சத்திரம் ராகுல் காந்தி..
புத்தகத்தை முழுவதுமாக படிக்க முடியவில்லை என்றால், மு.க.ஸ்டாலின் எழுதிய முன்னுரையை யாவது தமிழக பேச்சாளர்கள் மனப்பாடம் செய்து மேடைகளில் பேச வேண்டும்.
மொழிப்பற்று மு.க. ஸ்டாலின் ரத்தத்தில் கலந்தது.
கொள்கை பிடிவாதம் தான் அவரை இன்றைய நிலைமைக்கு காரணம்.
மொழி எங்கள் அடையாளம்; எங்கள் எல்லை
மொழி எங்களுக்கு கருத்தை விளக்கும் கருவி அல்ல..
இந்தியா முழுவதும் பேசப்பட்டிருக்க வேண்டிய தமிழ் மொழி சுருக்கப்பட்டு விட்டது.
இந்தியா முழுவதும் சமத்துவம் பரவ, திராவிட மாடல் அவசியம்.
பெரியாரின் நீட்சி அண்ணா.. கலைஞரின் நீட்சி மு.க.ஸ்டாலின்