Annamalai: "தாய்மார்களுக்கு அளிக்கப்படும் நியூட்ரிஷன் கிட்டில் குளறுபடி.. ரூ.77 கோடி இழப்பு" : குற்றஞ்சாட்டும் அண்ணாமலை
ஆவினில் வாங்காமல் அனிதா டெக்ஸ்காட் என்ற தனியார் நிறுவனத்திடம் வாங்கியதால் ரூ.77 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் கர்ப்பிணிகளுக்கு கொடுக்கப்பட்டு வரும் ‘நியூட்ரிஷியன் கிட்’ ஆவினில் வாங்காமல் அனிதா டெக்ஸ்காட் என்ற தனியார் நிறுவனத்திடம் வாங்கியதால் 77 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று செய்தியாளர் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
இரண்டு அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக தகவல் வெளியான நிலையில், தற்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆளுங்கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை, “கர்ப்பிணிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அம்மா நியூட்ரிஷியன் கிட் கொடுக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அம்மா என்ற பெயர் நீக்கப்பட்டு ‘நியூட்ரிஷியன் கிட்’ என்ற பெயரில் கிட் கொடுக்கப்பட்டு வருகிறது. ‘நியூட்ரிஷியன் கிட்’ தொகுப்பில் 31.03.2022 அன்றைய முடிவின்படி, ஆவின் ஹெல்த் மிக்ஸ் சேர்க்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் 23.88 லட்சம் நியூட்ரிஷியன் கிட்டுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் சிலரது நிர்பந்தம் காரணமாக மறுபடியும் ஆவின் ஹெல்த் மிக்ஸ் நீக்கப்பட்டு தனியார் நிறுவன ஹெல்த் மிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. ஆவினில் வாங்காமல் அனிதா டெக்ஸ்காட் என்ற தனியார் நிறுவனத்திடம் வாங்கியதால் ரூ.77 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த நிறுவனத்தின் புரோ பி.எல்.மிக்ஸ்க்கான டெண்டரை ரத்து செய்து ஆவினுக்கு வழங்க வேண்டும்” என்று கூறினார்.
Breaking News Tamil LIVE: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது- செயலாளர் ராதாகிருஷ்ணன்
மேலும், “ஜீ-ஸ்கொயர் நிறுவனத்தின் வளர்ச்சி கழகமாக சிம்டிஏ மாறியுள்ளது. இந்த நிறுவனம் நிலம் அப்ரூவலுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் ஒரு மணி நேரம் ஆன்லைன் லிங்க் செயல்பாட்டில் உள்ளது. பிறகு செயல்படாமல் போகிறது. இந்த நிறுவனம் 15 திட்டங்களை செய்து முடித்துள்ளது. புதிதாக 6 நிறுவனங்களை ஜீ-ஸ்கொயர் நிறுவனம் வாங்கியுள்ளது. கட்டுமான திட்டங்கள் ஜீ-ஸ்கொயர் நிறுவனத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி செயல்படுகிறார். கோவையில் 122 ஏக்கருக்கான அனைத்து ஒப்புதல்களையும் அந்த நிறுவனம் 8 நாட்களில் பெற்றுள்ளது” என்றும் கூறினார்.
TN New Omicron Cases: தமிழ்நாட்டில் 4 பேருக்கு BA4, 8 பேருக்கு BA5 - அமைச்சர் பகீர் தகவல்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்