TN New Omicron Cases: தமிழ்நாட்டில் 4 பேருக்கு BA4, 8 பேருக்கு BA5 - அமைச்சர் பகீர் தகவல்
TN New Omicron Cases: மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி!
தமிழ்நாட்டில் புதிய வகையிலான கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளாதாக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மக்களை எச்சரித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸின் உருமாறிய தொற்றின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் பி.எ.4 வகை கொரோனாவால் 4 பேரும், பி.ஏ.5 வகை கொரோனாவால் 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் இவர்களுக்கு தொற்று உறுதியான நிலையில், மருத்துவமனையில் சிக்கிப்பெற்று வந்தனர். தற்போது 12 பேரும் பாதிப்பிலிருந்து குணமாகியுள்ளனர். உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 பேரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
நாவலூர் பகுதியில் பி.ஏ.4 ரக உருமாறிய கொரோனா தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.” என்று கூறினார்.
தமிழ்நாடு அரசு சார்பில் அம்மா நியூட்ரிசியன் கிட் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் நியூட்ரிசியன் கிட்டில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், டெண்டர் விடுவதற்கு முன்பாகவே அதில் ஊழல் நடந்துள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார். 2 நாட்களுக்கு பின்னர்தான் டெண்டரே விடப்பட உள்ளது. ஆனால், அதற்குள் ஊழல் என புகார் தெரிவித்திருக்கிறார். டெண்டர் பணிகள் முடியும் முன்பே ஊழல் நடந்ததாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அண்னாமலை அறிவுப்பூர்வமாக புகார் வைப்பார் என நினைத்தேன். ஆனால், ஆதாரம் இல்லாமல் பேசுகிறார். என்று கூறினார்.
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமமையில் மக்கள் நலவாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறியதாவது:
பி.ஏ.4 மற்றும் பி.ஏ.5 ஆகிய உருமாறிய கொரோவால் பாதிக்கப்பட்ட 12 பேர் முழுமையாக குணமாகி வீடு திரும்பிவிட்டனர்.
சென்னை, காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. மக்கள் அனைவரும் மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளியை கடைப்பிடிப்பது, தடுப்பூசி செலுத்துவது ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.’ என்று கூறியுள்ளார்.
Suriya Salary : விக்ரம் படத்துக்காக சூர்யா பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா? வாவ் சொல்லவைத்த தகவல் இது..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்