TN Assembly LIVE: நீட் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசுத்தலைவருக்கு அனுப்பியுள்ளதாக தகவல்
TN Assembly Session LIVE Updates: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெறும் விவாதம் தொடர்பான உடனுக்குடன் தகவல்கள்..!

Background
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான பொதுவிவாதம் நடைபெற்றது. அதன்பின்னர் தற்போது மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. கடந்த நான்கு நாட்கள் சட்டப்பேரவைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நான்கு நாட்கள் இடைவேளைக்கு பிறகு இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது. அதில் இந்து சமய அறநிலைய துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. அமைச்சர் சேகர் பாபு மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் இந்த விவாதத்தில் சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
விசாரணை கைதி விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயம்
விசாரணை கைதி விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயம் எனவும் ரத்தக் கட்டுகள் காணப்படுவதாகவும் உடற்கூர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லத்தி போன்ற ஆயுதத்தால் தாக்கிய அடையாளங்களும் உடலில் காணப்படுகிறது என ஆய்வில் தகவல்
52 வாரங்களுக்கு வள்ளலார் முப்பெரும் விழா
52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் வள்ளலார் முப்பெரும் விழா நடத்தப்படும் என்று அறநிலையத்துறை மானியக்கோரிக்கையில் அறிவிப்பு




















