TN All Party Meet LIVE: நீட் தேர்வு விலக்கு மசோதா: சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது..
கடந்த 6ம் தேதி அன்று ‘நீட்’ தேர்வு தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டுவது குறித்து, சட்டப்பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் அறிவித்தார்

Background
இன்று(8.1.2022) காலை 10.30 மணியளவில் தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
முன்னதாக, கடந்த 5ஆம் தேதி இடம்பெற்ற ஆளுநர் உறையில், “'நீட் தேர்வு தேவையில்லை என்ற நிலையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. நுழைவுத் தேர்வுகள் கிராம மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துகிறது. நீட் போன்ற நுழைவு தேர்வுகள் உயர்கல்விக்கு தேவை இல்லை என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது'' எனக் கூறியிருந்தார். அதனையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 6ம் தேதி அன்று ‘நீட்’ தேர்வு தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டுவது குறித்து, சட்டப்பேரவை விதி 110-ன்கீழ் அறிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சட்டமன்றத்தின் முடிவை ஆளுநர் மதிக்கவேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்
சட்டமன்றத்தின் முடிவை ஆளுநர் மதிக்கவேண்டும். அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாடு மாணவர்களின் தன்னம்பிக்கையை குறைக்காதீர்கள் - வானதி சீனிவாசன்
தமிழ்நாடு மாணவர்களின் தன்னம்பிக்கையை குறைக்காதீர்கள் - வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பில்.,





















