TN 12th Result 2025 LIVE: தமிழ்நாடு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேரலை...
Tamil Nadu 12th Result 2025 LIVE Updates: 2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான தமிழக பள்ளிக்கல்வி வாரியத்தின் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை நேரலையில்...

Background
மாநில கல்வி வாரியத்தின் கீழ் மார்ச் 3-ம் தேதி முதல் 25 வரை தேர்வு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினர். அதைத் தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடந்தது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டு இருந்தது. எனினும், ஒருநாள் முன்கூட்டியே, அதாவது இன்று 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகி வருகிறது. தேர்வு முடிவுகளை நேரலையில் உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Tamil Nadu 12th Result 2025 LIVE: அதிக தேர்ச்சி சதவீதம் பெற்ற அரசுப் பள்ளிகள் - முதல் 5 மாவட்டங்கள்
அரசுப் பள்ளி மாணாக்கர்களில் அதிக தேர்ச்சி சதவீதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள் பின்வருமாறு...
அரியலூர் - 98.32%
ஈரோடு - 96.88%
திருப்பூர் - 95.64%
கன்னியாகுமரி - 95.06%
கடலூர் - 94.99%
Tamil Nadu 12th Result 2025 LIVE: வழக்கம் போல் மாணவிகளே அதிக தேர்ச்சி
பிளஸ் 2 பொதுத்தேர்வில் இந்த ஆண்டும் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 3.54% அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.





















