மேலும் அறிய

Tiruvannamalai: மனைவியை மானபங்கம் செய்ததாக ராணுவ வீரர் புகார்... போலீஸ் விசாரணையில் வெளியான உண்மை!

தன்னுடைய மனைவியை தாக்கியதாக திருவண்ணாமலையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜம்மு காஷ்மீரில் இருந்து கோரிக்கை விடுத்த சம்பவத்தில் போலீசார் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணி அருகேயுள்ள படவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ராணுவ வீரராக உள்ளார். இவரது மனைவி கீர்த்தி படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலயம்  எதிரில்  பேன்ஸி ஸ்டோர் நடத்தி வந்துள்ளார். அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருக்கும் இந்த கடையை குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவர் குத்தகை எடுத்துள்ளார். அவரிடமிருந்து ராணுவ வீரரின் மனைவி வாடகைக்கு கடை எடுத்து நடத்தி வந்துள்ளார். 

இதற்கிடையில் தற்பொழுது ஒப்பந்தம் முடிவடைந்து கடையினை காலி செய்ய வேண்டும் என ராமு கூறியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் ராமு தரப்பினர் பேன்ஸி ஸ்டோரில் இருந்த பொருட்களை வீசி எறிந்துள்ளதாகவும், அப்போது ஏற்பட்ட தகராறில் கீர்த்தி தாக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் சந்தவாசல் காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனிடையே காஷ்மீரில் இருந்து ராணுவ வீரர் பிரபாகரன் டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘திருவண்ணாமலை மாவட்டம் படவேடு கிராமத்தில் கடை வைத்துள்ள எனது மனைவியை அரை நிர்வாணமாக்கி தாக்கியுள்ளார்கள். அவர் நடத்தி வந்த கடையை காலி செய்யக்கோரி 120 பேர்  கும்பலாக வந்து கடையை சேதப்படுத்தியதோடு, மனைவியையும் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.,க்கு புகார் அனுப்பியுள்ளேன். உள்ளூர் காவல் நிலையத்தில் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. என் குடும்பத்தினரை காப்பாற்றுங்கள்’ என மண்டியிட்டு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. 

உடனடியாக இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அதில், “ஒப்பந்தத்தின் படி வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்து கடையை காலி செய்ய ராமு சொன்ன நிலையில், கீர்த்தியின் சகோதரர் ஜீவா அவரை தாக்கியுள்ளார். இதனால் ஆவேசமடைந்த அருகிலிருந்த பொதுமக்கள் ராமுவுக்கு ஆதரவாக அவர் தாக்கப்பட்டதை தட்டிக் கேட்டுள்ளனர். இதில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் கடையில் இருந்த பொருட்களை எல்லாம் வெளியே போட்டுள்ளனர். ஆனால் கீர்த்தியையோ, அவரது தாயாரையோ தாக்கியதாகவோ, அவமதித்ததாகவோ கூறப்பட்ட நிலையில் அப்படி இரு சம்பவம் நடக்கவில்லை என தெரிய வந்தது. இது மிகைப்படுத்தி சொல்லப்பட்டுள்ள தகவல் என்றும், இரு தரப்பும் சந்தவாசல் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்” என திருவண்ணாமலை மாவட்ட போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

M. K. Alagiri : “மீண்டும் திமுகவில் மு.க.அழகிரி?” மன்னிப்பு கடிதம் கொடுத்த ஆதரவாளர்கள்..!

Tamilnadu Roundup: நிரம்பி வழியும் தமிழக நீர்நிலைகள்! தீவிரம் அடையும் மழை - தமிழகத்தில் இதுவரை!

kalaignar kaivinai thittam 2024: எதுக்கு விஸ்வகர்மா? ”படிப்பு தான் முக்கியம் ப்ரோ” - அண்ணாமலை மீது திமுக அரசு அட்டாக்

Sanjeev Goenka : ”ஒரு வார்த்தை கூட பேசல! இனியும் பேச மாட்டாரு” தோனி குறித்து மனம் திறந்த  கோயங்கா..

ABP Premium

வீடியோ

DMK Survey On TVK : ‘’விஜய் தான் பெரிய MINUS’’.. DMK எடுத்த சீக்ரெட் சர்வே! வெளியான மெகா ட்விஸ்ட்TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
M. K. Alagiri : “மீண்டும் திமுகவில் மு.க.அழகிரி?” மன்னிப்பு கடிதம் கொடுத்த ஆதரவாளர்கள்..!
M. K. Alagiri : “மீண்டும் திமுகவில் மு.க.அழகிரி?” மன்னிப்பு கடிதம் கொடுத்த ஆதரவாளர்கள்..!
Tamilnadu Roundup: நிரம்பி வழியும் தமிழக நீர்நிலைகள்! தீவிரம் அடையும் மழை - தமிழகத்தில் இதுவரை!
Tamilnadu Roundup: நிரம்பி வழியும் தமிழக நீர்நிலைகள்! தீவிரம் அடையும் மழை - தமிழகத்தில் இதுவரை!
kalaignar kaivinai thittam 2024: எதுக்கு விஸ்வகர்மா? ”படிப்பு தான் முக்கியம் ப்ரோ” - அண்ணாமலை மீது திமுக அரசு அட்டாக்
kalaignar kaivinai thittam 2024: எதுக்கு விஸ்வகர்மா? ”படிப்பு தான் முக்கியம் ப்ரோ” - அண்ணாமலை மீது திமுக அரசு அட்டாக்
Sanjeev Goenka : ”ஒரு வார்த்தை கூட பேசல! இனியும் பேச மாட்டாரு” தோனி குறித்து மனம் திறந்த  கோயங்கா..
Sanjeev Goenka : ”ஒரு வார்த்தை கூட பேசல! இனியும் பேச மாட்டாரு” தோனி குறித்து மனம் திறந்த கோயங்கா..
Dindigul Hospital: உயிர்களை பறித்த மருத்துவமனை, 7 பேர் பலி - திண்டுக்கல் மருத்துவமனை விபத்தில் நடந்தது என்ன?

Magaram New Year Rasi Palan: இழந்ததை எல்லாம் அடையப்போகும் மகரம்! 2025ம் ஆண்டு உங்களுக்கு எப்படி? ஆண்டு ராசிபலன்

Breaking News LIVE: திண்டுக்கல்லில் 6 பேர் தீ விபத்தில் உயிரிழப்பு! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

TN Rain Update: 13 மாவட்டங்களில் கனமழை - இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு லிஸ்ட் இதோ..!

Embed widget