மேலும் அறிய

TVM Karthigai Deepam Spl. Buses: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா; 4,764 சிறப்புப் பேருந்துகள் - முழு விவரம் இதோ

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக மாநிலம் முழுவதும் 4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மாநிலம் முழுவதிலுமிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறன்றன.

கார்த்திகை தீபத் திருவிழா - 4,764 சிறப்புப் பேருந்துகள்

கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக, பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக செய்யப்படவேண்டிய ஏற்பாடுகள் குறித்து, போக்குவரத்துத் துறையினருடன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் இருந்து, திருவண்ணாமலைக்கு 4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, சென்னை, விழுப்புரம், வேலூர், ஆரணி, சேலம், தருமபுரி, கோவை, ஈரோடு, மதுரை, திண்டுக்கல், நெல்லை, கும்பகோணம், நாகப்பட்டினம், திருச்சி, கடலூர், புதுச்சேரி, பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, திருவண்ணாமலை நகரத்திற்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக, வட்டார போக்குவரத்துத் துறையின் மூலமாக, திருவண்ணாமலையில் தற்காலிகமாக 9 பேருந்து நிலையங்களை அமைத்து, அங்கிருந்து தேவைக்கு ஏற்ப பேருந்து வசதி செய்து கொடுக்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறை கூறியுள்ளது.

திருவண்ணாமலையில் 9 தற்காலிக பேருந்து நிலையங்கள்

மேலும், தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து, கிரிவலப் பாதைக்கு பக்தர்கள் சென்றுவர, 70 கட்டணமில்லா சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், தீபத் திருவிழா நாளில், சுமார் 4 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என மாவட்ட நிர்வாகம் கணித்துள்ளதால், சாலை பராமரிப்பு, குடிநீர், மருத்துவ வசதிகள் ஆகியவற்றிற்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கார்த்திகை தீபம் மற்றும் கிரிவலம்

திருவண்ணாமலையில், ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினத்தில், அதிகாலை 4 மணிக்கே கோயில் கருவறையின் உள்ளே பரணி தீபம் ஏற்றப்படும்.

பின்னர், மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலை மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். அதைத் தொடர்ந்து, டிசம்பர் 4-ம் தேதி, பௌர்ணமி கிரிவலம் நடைபெறும். இந்த கிரிவலத்தில், தமிழ்நாடு மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கிரிவலத்தில் கலந்துகொண்டு, பின்னர் அண்ணாமலையாரை தரிசனம் செய்வது வழக்கம்.

 

தலைப்பு செய்திகள்

21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
400 தவெக வாக்குறுதிகளில் 40 கூட நிறைவேற்றப்படலை; ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைப்பா? அன்புமணி விமர்சனம்
400 தவெக வாக்குறுதிகளில் 40 கூட நிறைவேற்றப்படலை; ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைப்பா? அன்புமணி விமர்சனம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
North Korea Heatwave: “வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
“வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
Embed widget