மேலும் அறிய

Crime: அம்மிக்கல்லை போட்டு மாமனாரை கொன்ற மருமகன் - ஆரணியில் பயங்கரம்

ஆரணி பகுதியில் குடும்பத்த தகராறில் அம்மிக்கல்லை போட்டு மாமனாரை கொலை செய்த மருமகனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர் பகுதியில் உள்ள பெரிய நகரில் வசிப்பவர் ஜமால் பாஷா வயது (65). இவர் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சைதாணி பி, இவரது மூன்றாவது மகள் மனிஷா வயது (28). இவருக்கும் ஆரணி நகரம் பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்த பாத்திர வியாபாரி மன்சூர் அலிகான் வயது (32) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் பெற்றோர் மீது அதிகமான பாசம் வைத்திருந்த மனிஷா அடிக்கடி தாய் வீட்டுக்கு சென்று உடல்நிலை சரியில்லாத தாயை கவனித்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே குடும்பம் நடத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு மனிஷா தாய் வீட்டிற்கு செல்லாமல் இருந்துள்ளார். பிறகு தாய் சைதாணி பிக்கு உடல்நிலை மிகவும் மோசமாக சென்றதாகவும் இதனால் தாயை காண மனிஷா சென்றுள்ளார். 

Crime: அம்மிக்கல்லை போட்டு மாமனாரை கொன்ற மருமகன் - ஆரணியில் பயங்கரம்

 மாமனாரை கொலை செய்த மருமகன்

இதை அறிந்த மன்சூர் அலிகான்  ஒரு கட்டத்தில் மனைவியை பார்த்து, ”நீ உன் தந்தையிடம் தகாத உறவு வைத்துள்ளாய் அதனால் தான் அடிக்கடி அவரை பார்க்கத் தாய் வீட்டுக்கு செல்கிறாய்” என்று கூறி சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த மனிஷா கணவரிடம் கோபித்துக் கொண்டு சில தினங்களுக்கு முன்பு குழந்தையுடன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.இதை அறிந்த மனிஷாவின் சகோதரர்கள் நேற்று மன்சூர் அலிகான் வீட்டுக்குச் சென்று சமாதானம் பேசியுள்ளனர். இதற்கிடையில் 12 மணி அளவில் மாமியார் வீட்டுக்குச் சென்ற மன்சூர் அலிகான் மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு மனைவி மனிஷாவை  அழைத்துள்ளார். அப்போது கணவன் மனைவிக்கும்  இடையே மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மன்சூர் அலிகான் வீட்டில் இருந்து அம்மிக்கலை எடுத்து அங்கு அறையில் உறங்கிக் கொண்டிருந்த மாமனார் ஜமால் பாஷா தலைமீது போட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து  சென்றுவிட்டார்.

Crime: அம்மிக்கல்லை போட்டு மாமனாரை கொன்ற மருமகன் - ஆரணியில் பயங்கரம்

கைது செய்யப்பட்ட மருமகன் 

இதில் தலையில் பலத்த காயம் அடைந்து  ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ஜமால் பாஷாவை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து  தகவல் அறிந்த ஆரணி நகர துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஆய்வாளர் சுப்பிரமணி, துணை ஆய்வாளர் சந்திரரேசன் மற்றும் காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையில் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜமால் பாஷா அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மன்சூர் அலிகானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர். குடும்ப தகராறில் சொந்த மாமனாரையே தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க; Watch Video: அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலை.. இன்று முதல் சிறப்பு சடங்குகள் தொடக்கம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

BREAKING: திருப்பத்தூர் அருகே பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை: முதியவர் காயம்? மாணவர்கள் நிலை என்ன?
BREAKING: திருப்பத்தூர் அருகே பள்ளியில் புகுந்த சிறுத்தை: முதியவர் காயம்? மாணவர்கள் நிலை என்ன?
Breaking News LIVE: கார் செட்டில் புகுந்த சிறுத்தை காட்சிகள்: பரபரப்பில் மக்கள்!
Breaking News LIVE: கார் செட்டில் புகுந்த சிறுத்தை காட்சிகள்: பரபரப்பில் மக்கள்!
சீக்கியர்களின் முதல் மன்னரின் நினைவு தினம்! 509 இந்தியர்களுக்கு விசா வழங்கிய பாகிஸ்தான்!
சீக்கியர்களின் முதல் மன்னரின் நினைவு தினம்! 509 இந்தியர்களுக்கு விசா வழங்கிய பாகிஸ்தான்!
Bakrid 2024: இஸ்லாமியர்களின் பெருநாள்! பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்? இதுதான் வரலாறு
Bakrid 2024: இஸ்லாமியர்களின் பெருநாள்! பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்? இதுதான் வரலாறு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Ramadoss vs Anbumani  : வேண்டும்.. வேண்டாம்..ராமதாஸ் vs அன்புமணி! குழப்பத்தில் பாமக!Tamilisai Vs Annamalai : தமிழிசைக்கு அழுத்தம்? மேடையில் நடந்தது என்ன? பரபரப்பு விளக்கம்Yediyurappa Arrest? | சிறுமிக்கு பாலியல் தொல்லை எடியூரப்பாவுக்கு கைது வாரண்ட்!Madurai Muthu Help Handicap People | லாரான்ஸ், பாலா வரிசையில்..   நடிகர் மதுரை முத்து!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BREAKING: திருப்பத்தூர் அருகே பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை: முதியவர் காயம்? மாணவர்கள் நிலை என்ன?
BREAKING: திருப்பத்தூர் அருகே பள்ளியில் புகுந்த சிறுத்தை: முதியவர் காயம்? மாணவர்கள் நிலை என்ன?
Breaking News LIVE: கார் செட்டில் புகுந்த சிறுத்தை காட்சிகள்: பரபரப்பில் மக்கள்!
Breaking News LIVE: கார் செட்டில் புகுந்த சிறுத்தை காட்சிகள்: பரபரப்பில் மக்கள்!
சீக்கியர்களின் முதல் மன்னரின் நினைவு தினம்! 509 இந்தியர்களுக்கு விசா வழங்கிய பாகிஸ்தான்!
சீக்கியர்களின் முதல் மன்னரின் நினைவு தினம்! 509 இந்தியர்களுக்கு விசா வழங்கிய பாகிஸ்தான்!
Bakrid 2024: இஸ்லாமியர்களின் பெருநாள்! பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்? இதுதான் வரலாறு
Bakrid 2024: இஸ்லாமியர்களின் பெருநாள்! பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்? இதுதான் வரலாறு
தமிழிசை வீட்டிற்கே சென்ற அண்ணாமலை: என்ன நடந்தது தெரியுமா?
தமிழிசை வீட்டிற்கே சென்ற அண்ணாமலை: என்ன நடந்தது தெரியுமா?
பாரதிதாசன் பல்கலை. உறுப்புக் கல்லூரி ஆசிரியர்களுக்கு 7 மாத ஊதிய பாக்கி: உடனே வழங்க வலியுறுத்தல்
பாரதிதாசன் பல்கலை. உறுப்புக் கல்லூரி ஆசிரியர்களுக்கு 7 மாத ஊதிய பாக்கி: உடனே வழங்க வலியுறுத்தல்
Cabinet Portfolio: துணை முதலமைச்சரானார் பவன் கல்யாண்.. ஆந்திர அமைச்சரவை இலாக்காக்கள் அறிவிப்பு!
துணை முதலமைச்சரானார் பவன் கல்யாண்.. ஆந்திர அமைச்சரவை இலாக்காக்கள் அறிவிப்பு!
AI in IIT Madras: ஐஐடி சென்னையில் AI படிக்க ஆசையா? இந்த ஆண்டிலேயே சேரலாம்: எப்படி?- முழு விவரம்
AI in IIT Madras: ஐஐடி சென்னையில் AI படிக்க ஆசையா? இந்த ஆண்டிலேயே சேரலாம்: எப்படி?- முழு விவரம்
Embed widget