Schools Leave: விரட்டி விரட்டி வெளுக்கும் கனமழை... தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா?
தொடர் கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 4 தாலுகாக்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தொடர் கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 4 தாலுகாக்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி, ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளூர் தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல்,வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று 04.11.2022 காஞ்சிபுரம் மாவட்டம குன்றத்தூர் பகுதியில் இயங்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.
மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று(4.11.2022) பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் கன மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு (04.11.2022) மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
தொடர் மழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
04.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
05.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
06.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
07.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.