மேலும் அறிய

"இந்துக்கள் மனதை புண்படுத்திட்டாங்க" பரிதாபங்கள் யூடியூப் சேனலுக்கு நெருக்கடி.. வேலையை காட்டும் பாஜக!

திருப்பதி லட்டு குறித்து பரிதாபங்கள் யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோ தொடர்பாக ஆந்திர பிரதேச டிஜிபியிடம் தமிழக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி லட்டு விவகாரம் குறித்து வீடியோ வெளியிட்டிருந்த பரிதாபங்கள் யூடியூப் சேனலுக்கு எதிராக ஆந்திர பிரதேச டிஜிபியிடம் தமிழக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெரும் பாரம்பரியத்தை கொண்ட திருப்பதி லட்டு பிரசாதத்தை சுற்றி தற்போது, பூதாகரமான சர்ச்சை வெடித்தது. பெருமானுக்கு நெய்வேத்தியமாக படைத்து பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டில், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார்.

பரிதாபங்கள் யூடியூப் சேனலுக்கு நெருக்கடி:

முந்தைய ஜெகன் மோகன் ஆட்சி நிர்வாகமே இதற்கு காரணம் என சாடியிருந்தார். இது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, வெளியான ஆய்வில் லட்டுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இப்படிப்பட்ட சூழலில், திருப்பதி லட்டு விவகாரம் குறித்து கோபி, சுதாகரின் பரிதாபங்கள் யூடியூப் சேனல் ட்ரோல் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே வீடியோ பயங்கர வைரலானது. ஆனால், வீடியோவை பரிதாபங்கள் யூடியூப் சேனலே திடீரென நீக்கியது.

சிலர் மனதை புண்படுத்தும் வகையில் வீடியோ இருந்ததாக புகார் எழுந்ததால் அதை நீக்கியதாக பரிதாபங்கள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், பரிதாபங்கள் யூடியூப் சேனலுக்கு எதிராக ஆந்திர பிரதேச டிஜிபியிடம் தமிழக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவுக்கு பறந்த புகார்:

எக்ஸ் தளத்தில் இதுகுறித்து பாஜக நிர்வாக அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்ட தகவலில், "பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் எச். ராஜாவின் அனுமதியை தொடர்ந்து, "Ladoo Pavangal" என்ற தலைப்பிலான அவதூறான வீடியோ வெளியிட்டதற்காக பரிதாபங்கள் யூடியூப் சேனலுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரி, ஆந்திரப் பிரதேச டிஜிபியிடம் முறையான புகார் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளேன்.

இணையத்தில் அவர்கள் வீடியோவை அகற்றியிருந்தாலும், வீடியோ இந்துக்களின் உணர்வுகளை அவமதிப்பது மட்டுமல்லாமல், சமூகங்களுக்கு இடையே பகையை பரப்பும் வகையிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தூண்டும் வகையிலும் இருந்தது.

அதோடு, முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்பட பொறுப்பான அரசு பதவிகளில் உள்ள நபர்களை இழிவுபடுத்தும் வகையில் இருக்கிறது. இந்த பிரச்சினையில் விரைவான மற்றும் நேர்மறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rains: மக்களே உஷார்! இன்றும், நாளையும் இத்தனை மாவட்டங்களில் கனமழை பெய்யுமா?
TN Rains: மக்களே உஷார்! இன்றும், நாளையும் இத்தனை மாவட்டங்களில் கனமழை பெய்யுமா?
Breaking News LIVE 1st Nov : வங்கியில் தேவர் தங்கக் கவசத்தை வங்கியில் ஒப்படைக்கும் அதிமுகவினர்
Breaking News LIVE 1st Nov : வங்கியில் தேவர் தங்கக் கவசத்தை வங்கியில் ஒப்படைக்கும் அதிமுகவினர்
IND vs NZ: தமிழனின் கையில் இந்தியா! அஸ்வின் இடத்தை நிரப்புவாரா வாஷிங்டன் சுந்தர்?
IND vs NZ: தமிழனின் கையில் இந்தியா! அஸ்வின் இடத்தை நிரப்புவாரா வாஷிங்டன் சுந்தர்?
LSG:அன்று தோனி.. இன்று கே.எல்.ராகுல்! கடுமையாக விமர்சித்த லக்னோ அணி உரிமையாளர்
LSG:அன்று தோனி.. இன்று கே.எல்.ராகுல்! கடுமையாக விமர்சித்த லக்னோ அணி உரிமையாளர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kamal thank MK Stalin : ”நான் சொன்ன வார்த்தைக்காக.. கண்கலங்கிய முதல்வர்” நெகிழ்ச்சியில் கலங்கிய கமல்Varunkumar IPS : “திருடர் கூட்டம்.. சாதி வெறி”மனைவி போட்டோவை மார்பிங் பொளந்து கட்டிய வருண் ipsSeeman Viral video : ”வெளிய போ..சீமான்!”விரட்டியடித்த பசும்பொன் மக்கள் தேவர் ஜெயந்தியில் பரபரப்புUdhayanidhi wishes Ajith : ”ஒன்றிணைந்து செயல்படுவோம்” அஜித்தை அழைத்த உதயநிதி!கொண்டாடும் AK ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rains: மக்களே உஷார்! இன்றும், நாளையும் இத்தனை மாவட்டங்களில் கனமழை பெய்யுமா?
TN Rains: மக்களே உஷார்! இன்றும், நாளையும் இத்தனை மாவட்டங்களில் கனமழை பெய்யுமா?
Breaking News LIVE 1st Nov : வங்கியில் தேவர் தங்கக் கவசத்தை வங்கியில் ஒப்படைக்கும் அதிமுகவினர்
Breaking News LIVE 1st Nov : வங்கியில் தேவர் தங்கக் கவசத்தை வங்கியில் ஒப்படைக்கும் அதிமுகவினர்
IND vs NZ: தமிழனின் கையில் இந்தியா! அஸ்வின் இடத்தை நிரப்புவாரா வாஷிங்டன் சுந்தர்?
IND vs NZ: தமிழனின் கையில் இந்தியா! அஸ்வின் இடத்தை நிரப்புவாரா வாஷிங்டன் சுந்தர்?
LSG:அன்று தோனி.. இன்று கே.எல்.ராகுல்! கடுமையாக விமர்சித்த லக்னோ அணி உரிமையாளர்
LSG:அன்று தோனி.. இன்று கே.எல்.ராகுல்! கடுமையாக விமர்சித்த லக்னோ அணி உரிமையாளர்
தமிழ்நாடு தினம்: தியாகங்களை நினைவு கூருவோம் - தவெக தலைவர் விஜய் வாழ்த்து
தமிழ்நாடு தினம்: தியாகங்களை நினைவு கூருவோம் - தவெக தலைவர் விஜய் வாழ்த்து
Group 4: குரூப் 4 தேர்வு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்?  TNPSC தந்த முக்கிய அப்டேட் இதுதான்!
Group 4: குரூப் 4 தேர்வு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? TNPSC தந்த முக்கிய அப்டேட் இதுதான்!
செயல்படாத தமிழக முதல்வர் ஹெல்ப்லைன் செயலி - மக்கள் அதிருப்தி; கண்டு கொள்ளுமா அரசு....!
செயல்படாத தமிழக முதல்வர் ஹெல்ப்லைன் செயலி - மக்கள் அதிருப்தி; கண்டு கொள்ளுமா அரசு....!
Thanjavur Glass Painting: அசைக்க முடியாத பெருமையை பெற்ற தஞ்சாவூர் கண்ணாடி ஓவியங்கள்
அசைக்க முடியாத பெருமையை பெற்ற தஞ்சாவூர் கண்ணாடி ஓவியங்கள்
Embed widget