Thrissur ATM Theft: கற்களை வீசிய போலீஸ்; உடைந்த கண்ணாடி.. சீறிய கண்டைனர் லாரி.. விறுவிறு சேஸிங்!
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் ஹரியாணா, ராஜஸ்தானைச் சேர்ந்த கொள்ளையர்கள், திருடிய பணத்துடன் பிடிபட்ட நிலையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
வெப்படை – சங்ககிரி சாலையில் லாரி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த நிலையில், நாமக்கல் போலீசார் 30 இருசக்கர வாகனங்களில் விரட்டினர். அப்போது காவல்துறையினர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
லாரியின் முன்பக்கக் கண்ணாடிகள் உடைந்தபோதும் கொள்ளையர்கள் வேகமாகச் சென்றனர். பரபர பாணியில் விறுவிறுவென சேஸிங் நடந்தது. இதில், கொள்ளையர்களில் ஒருவரான ஜமாலுதீன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில், ஹசர் அலி என்னும் குற்றவாளி 2 கால்களிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்து, பள்ளிபாளையம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெப்படை காவல் நிலையத்தில் விசாரணை
மீதமுள்ளவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த கொள்ளையர்களிடம் சேலம் சரகர் டிஐஜி உமா, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோ வெப்படை காவல் நிலையத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.
கைதிகளுக்கு இந்தியைத் தவிர வேறு மொழி தெரியாததால் மொழிபெயர்ப்பாளர்களை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்டமாக கொள்ளையர்கள் ராஜஸ்தான் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
இதையும் வாசிக்கலாம்: சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!