மேலும் அறிய

Thrissur ATM Theft: லட்சக்கணக்கான பணத்துடன் கேரளாவில் தப்பித்த ஹரியானா கொள்ளையர்கள்; தமிழ்நாட்டில் மாட்டியது எப்படி?

Thrissur ATM Theft: கொள்ளையர்களில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட, ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீதமுள்ளோரை தமிழக காவல்துறை விசாரித்து வருகிறது. நடந்தது என்ன? பார்க்கலாம்.

கேரளாவில் 3 வெவ்வேறு ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்த ரூ.65 லட்சம் பணத்துடன் கேரளாவில் 2 சுங்கச் சாவடிகளில் தப்பித்த கண்டெய்னர் லாரி, தமிழ்நாட்டின் நாமக்கல் பகுதியில் பிடிபட்டுள்ளது. கொள்ளையர்களில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட, ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீதமுள்ளோரை தமிழக காவல்துறை விசாரித்து வருகிறது. நடந்தது என்ன? பார்க்கலாம்.

3 ஏடிஎம்களில் அதிகாலையில் பணம் கொள்ளை

கேரள மாநிலம் திருச்சூரில் மப்ரணம், கொலாழி, ஷோர்னூர் ஆகிய 3 பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.30 மணி முதல் 4 மணி வரை கொள்ளை நடந்தது. ஹரியானா, ராஜஸ்தானைச் சேர்ந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கேஸ் கட்டர்களைப் பயன்படுத்தி, ஏடிஎம் இயந்திரத்தைச் சேதப்படுத்தி உள்ளனர். இதில் ரூ.65 லட்சம் மதிப்பிலான பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

வெள்ளை நிற கிரெட்டா காரில் வந்த கொள்ளையர்கள், பணத்தை அடித்து தப்பிச் சென்றனர். பாதுகாப்பான இடத்துக்குச் சென்றதும் கண்டெய்னர் லாரியில் பணம், காரை மறைத்துள்ளனர்.

2 சுங்கச் சாவடிகளில் மண்ணைத் தூவிய கொள்ளையர்கள்

தொடர்ந்து பாலக்காடு உள்ளிட்ட கேரளாவின் 2 சுங்கச் சாவடிகள் வழியாகக் கொள்ளையர்கள் தப்பித்து வந்துள்ளனர். தமிழ்நாட்டுக்குள் நுழைந்த அவர்கள், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பச்சாம்பாளையம் பகுதியில் இன்று (செப்.27) காலை அதிவேகமாகச் சென்றனர்.

தாறுமாறாக லாரியை ஓட்டி அங்கிருந்த இரண்டு கார்கள், 4 இரு சக்கர வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளனர். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, குமாரபாளையம் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த குமாரபாளையம் காவல்துறையினர் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்றனர். ஆனாலும் நிறுத்தாமல் லாரி வேகமாகச் சென்றது. காவல்துறையினர் ஜீப் மீது மோதும் வகையில் வந்ததால் காவல்துறையினர் அருகில் இருந்த கற்களை எடுத்து லாரியைத் தாக்கினர்.

துப்பாக்கியுடன் இருந்த வட மாநில இளைஞர்கள்

இதனால் நிலைகுலைந்து வாகன ஓட்டி, லாரியை சாலையின் நடுவில் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து காவல்துறையினர் அந்த வாகனத்தைச் சூழ்ந்து உள்ளே செல்ல முயன்றனர். ஆனால் உள்ளே சில வட மாநில இளைஞர்கள் துப்பாக்கியுடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக கண்டெய்னர் கதவை மூடிவிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காவல் கண்காணிப்பாளர் அதிரடி படையினருடன் வந்து வாகனத்தை சுற்றிய வளைத்து, கைது செய்தனர்.

இதற்கிடையே கொள்ளையர்கள் கடப்பாரையால் தாக்கியதில் எஸ்ஐ ஒருவர் காயம் அடைந்தர். இதைத் தொடர்ந்து லாரிக்கு உள்ளே இருந்த ஒருவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இன்னொருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீதமுள்ளோர் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்கா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget