Youtube Channel: யூ ட்யூப் சேனல்.. சந்தைப்படுத்துதல் : வருமானம் பார்ப்பது எப்படி? தமிழக அரசு வழங்கும் பயிற்சி - இதை மிஸ் பண்ணாதீங்க!
தமிழ்நாடு அரசு யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறித்த மூன்று நாள் பயிற்சி முகாமை நடத்துகிறது.
Create own Youtube Channel: தமிழ்நாடு அரசு யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறித்த மூன்று நாள் பயிற்சி முகாமை நடத்துகிறது.
சென்னையில் மூன்று நாள் பயிற்சி:
செல்போன் வைத்திருக்கு எல்லோரும் தங்களுக்கு என்று தனி யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர். இதையே வேலையாக வைத்து சம்பாதிக்கும் சூழல் இன்று உள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் தான் இதில் அதிகமான யூடியூப் சேனல்களை நடத்தி வருகின்றனர்.
இது பொருளாதார ரீதியாக அனைவருக்கும் கைக் கொடுக்க கூடிய ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறிந்த மூன்று நாள் பயிற்சி முகாமை நடத்தி வருகிறது. ஏற்கனவே, டிசம்பர் மாதத்தில் இருந்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த மாதத்திலும் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
எப்போது, எங்கே நடைபெறுகிறது?
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி வரும் 10.02.2024 முதல் 12.02.2024 தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியத்துவம் என்ன?
இப்பயிற்சியில் தொழில் முனைவோர் யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி, வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு - ஆன்லைன் மார்க்கெட்டிங் - மற்றும் விதிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புக்கு:
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,
சிட்கோ தொழிற்பேட்டை,
பார்த்தசாரதி கோயில் தெரு,
இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல்,
சென்னை – 600 032
44-22252081/22252082, 8668102600 / 86681 00181 / 7010143022 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
RPF SI Recruitment 2024: ரயில்வே துறையில் 2,250 பணியிடங்கள் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
TNPSC Group-2 Counselling: வெளியானது குரூப் 2 பணியிடங்களுக்கான கலந்தாய்வு தேதி - விவரம்!