மேலும் அறிய

திருவண்ணாமலையில் 1200 ஆண்டுகாலம் பழமையான பல்லவர் கால ஐயனார் சிலை கண்டுபிடிப்பு...!

திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் அருகே உள்ள நல்லூர்கிராமத்தில் 1200 வருடம் பழமையான பல்லவர் கால ஐயனார் சிலை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு புராதன சின்னங்களும், பண்டைய காலத்தில் நடைபெற்ற ஆட்சி முறை, வாழ்க்கை சூழல், கல்வி, வீரம், கலாசாரம், பண்பாடு, இலக்கியம், வரலாறு என பல தகவல்களை நமக்கு எடுத்துரைத்து வருகின்றன. இதில் அகழாய்வு மூலம் கிடைக்கப்பெறும் தகவல்கள் சிறப்பு வாய்ந்தவையாக இருந்தாலும் குடைவரைகள், கோயில்கள், கோட்டைகள் போன்றவை சிறப்புமிக்க பல மன்னர்களின் தகவல்களை தாங்கி நிற்பதில் முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் நல்லூர் கிராமத்தில்  9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால பல்லவர்கள் காலத்து  சிற்பம் 1200 வருடம் பழமையான ஐயனார் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மரபுசார்அமைப்பின் தலைவர்  ராஜ்  பன்னீர் செல்வத்திடம் பேசுகையில்: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மரபுசார் அமைப்பை உதயராஜா மற்றும் சரவணன் ஆகியோர், நாங்கள் அனைவரும் இணைந்து மக்களுக்கும், வருங்கால சந்ததியினர்களுக்கும் நம்மளை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்களின் வரலாறையும் மற்றும் அவர்களுடைய நாகரிகங்களை இப்போது உள்ளவர்களுக்கும், வருங்காலத்தில் அதனை அழியாத வகையில் எங்களுடைய அமைப்பு அந்த சிற்பங்கள் மற்றும் நடுகள் போன்றவைகளை தேடி கண்டுபிடித்து அவைகளை உலகத்திற்கு கொண்டு வருகின்றோம்.

திருவண்ணாமலையில் 1200 ஆண்டுகாலம் பழமையான பல்லவர் கால ஐயனார் சிலை கண்டுபிடிப்பு...!

இந்நிலையில் தெள்ளாறு பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது, நல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் பாரதிராஜா என்பவர் எங்களுக்கு தந்த தகவலின் பேரில் நல்லூரில் உள்ள விவசாய நிலத்தில் உள்ள சிற்பத்தை காணச் சென்றோம். அப்போது செல்லும் போது மழைச்சாரல் பொழிந்து கொண்டு இருந்தது. ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல் நாங்கள் மழையில் நனைந்த படியே சென்றோம், அந்த மழையில் நனைந்தது எங்களுக்கு சிறிய வயது நாபகங்களை கொண்டுவந்தது அதற்கு அந்த மழைக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்தோம். நல்லூர் கிராமத்திற்கு வந்தடைந்தோம். அங்கு ஒரு சிறிய டீக்கடை ஒன்று இருந்தது மழையில் நனைந்து என்னுடன் வந்தவர்கள் சற்று குளிரில் நடுங்கிக்னர்.அதனால் அங்கு குளிரிக்கு இதமாக டீ ஒன்று சாப்பிட்டு விட்டு அங்கிருந்து பெரியகுப்பம் செல்லும் சாலையில் சென்றோம் அப்போது இடது புறம் உள்ள விவசாய நிலத்தில் இருப்பதாக கூறினார்கள். பின்னர் எங்களுடைய இருசக்கர வாகனத்தை ரோட்டில் நிறுத்தி விட்டு வயலில் நடுந்து சென்றோம், மழைநீரில் நனைந்த நெல் மணிகளில் மழைத்துளிகல் முத்துப்போன்று காட்சி அளித்து. 

திருவண்ணாமலையில் 1200 ஆண்டுகாலம் பழமையான பல்லவர் கால ஐயனார் சிலை கண்டுபிடிப்பு...!

அதனை தொடர்ந்து வயல்வேலி மண்ணில் சாய்ந்த நிலையில் ஒரு பலகை சிற்பம் காணப்பட்டது. அதனை சுத்தம் செய்து ஆய்வு செய்ததில் அது பல்லவர் காலத்து ஐயனார் சிலை என்பது எங்களுக்கு தெரியவந்தது. சுமார் அந்த சிலை  3 அடி அகலமும் 4 அடி  உயரமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. அழகிய ஜடாபாரம் தலையை அலங்கரிக்க, வட்டமான முகத்தில் தடித்த உதடுகளுடன் இரு காதுகளிலும் பத்ரகுண்டலம் அணிந்து காட்சி தருகிறார். கழுத்தில் உருண்டையான மணிகள் கோர்க்கப்பட்ட சரப்பளி போன்ற மாலையையும், இரு கைகளில் தோள்வளை மற்றும் கைவளை அணிந்து உத்குதிகாசன கோலத்தில் ஒரு வலது காலை மடக்கியும், இடது காலை தொங்கவிட்டும் அமர்ந்துள்ளார். இடையில் உதிரபந்தமும், இடை ஆடையில் உரையுடன் கூடிய கூறுவாள் ஒன்றும் காட்டப்பட்டுள்ளது. வலது கையை வலது காலின் முட்டி மீது வைத்து கையை தொங்கவிட்டு தனது ஆயுதமான செண்டை பற்றி கொண்டும், இடது கையை தொடை மீது வைத்து உள்ளார். இடது காலின் அருகே ஐயனாரின் வாகனமான குதிரை காட்சி படுத்தப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் 1200 ஆண்டுகாலம் பழமையான பல்லவர் கால ஐயனார் சிலை கண்டுபிடிப்பு...!

மேலும் இடது பக்கம் குத்துவிளக்கு ஒன்றும் காணப்படுகிறது. இதன் தலைபகுதி லிங்கம் போன்ற அமைப்பில் உள்ளது. சிற்ப அமைதி மற்றும் அணிகலன்களை வைத்துப் பார்க்கையில் இச்சிற்பம் 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால பல்லவர்கள் காலத்தியது என்று கருதப்படுகிறது.1200 வருடம் பழமையான இச்சிற்பம் பல வருடங்களாக மண்ணில் சாய்ந்தே கிடப்பதால் வெயிலுக்கும் மழைக்கும் நனைந்து சிலையின் மேற்பரப்பு மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுகிறது. இப்பகுதி மக்கள் மூடநம்பிக்கையின் காரணமாக இந்த சிலையினை சாய்தவாறே அப்படியே வைத்து வழிபடுகின்றனர். இச்சிலையின் தொன்மை மற்றும் பாதுகாப்பதன் அவசியம் குறித்து அங்குள்ளவர்களிடம் விளக்கிய பொழுது, விரைவில் இதனை நிமிர்த்தி பாதுகாப்பாக வைப்பதாக உறுதி அளித்தனர். மேலும் இவ்வூரில் பாதி உடைந்த நிலையில் சங்கு சக்கரம் ஏந்திய விஷ்ணு சிற்பம் ஒன்று பெரியகுப்பம் செல்லும் வழியில் இருப்பதும் கண்டறியப்பட்டது. இது பிற்கால விஜயநகர கலை பாணியில் அமைந்துள்ளது, என்று தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget