BREAKING: திருப்பத்தூரில் சிறுத்தை: முதியவர் காயம்? பொதுமக்கள், மாணவர்கள் நிலை என்ன?
Thirupaththur school old man assaulted by leopard: முதியவரை தாக்கிவிட்டு சிறுத்தை ஊருக்குள் தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பத்தூரில் பள்ளி ஒன்றில் சிறுத்தை புகுந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த முதியவரை தாக்கிவிட்டு சிறுத்தை ஊருக்குள் தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பள்ளியில் இருந்த மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியினை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.
சிறுத்தை நடமாடும் காட்சி:
திருப்பத்தூர் தனியார் பள்ளியில் சிறுத்தை...
— Raja Shanmugasundaram (@SRajaJourno) June 14, 2024
மயிலாடுதுறை, சேலத்தை தொடர்ந்து திருப்பத்தூரிலும்
என்னதான் ஆயிற்று இவைகளுக்கு. அடர் வனத்தைவிட்டு மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு வருகின்றன? @abpnadu pic.twitter.com/3WOVYAltaB
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள தனியார் பள்ளியில் சிறுத்தை புகுந்த நிலையில், அங்கிருந்து சிறுத்தையானது தப்பித்ததாக தகவல் தெரிவிக்கின்றன. இதனால் சுற்றியுள்ள பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
முதலில் சிறுத்தை வீட்டிக்குள் புகுந்ததாகவும் பின்னர், அருகே உள்ள மேரி ஹிமாகுலேட் பள்ளி வளாகத்தில் தாவியதாகவும் கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த வாட்ச்மேன் கோபால் என்பவரின் தலையை சிறுத்தை தாக்கியுள்ளது.
மாவட்ட வன அலுவலர் பேட்டி:
இந்த நிலையில் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் கூறுகையில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதை கண்டறிந்து மாவட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் பள்ளியில் சிறுத்தை நடைமாட்டம் இருப்பதாக அறிந்து பள்ளி மாணவர்களை பாதுகாப்பான முறையில் வீட்டிற்கு அனுப்பி வைத்தோம்.
மேலும் சிறுத்தையை தேடும் முயற்சியில் ஈடுபட்டு சிறுத்தை இருக்கும் இடத்தை கண்டறிந்தோம். மேலும் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் சுமார் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்
மேலும் சிறுத்தையை பிடிக்க தயார் நிலையில் வலைகளையும் கூண்டுகளையும் வைத்துள்ளோம் இதன் காரணமாக பொதுமக்கள் எவரும் அச்சப்பட தேவையில்லை . எனவே பொதுமக்கள் அனைவரும் சிறுத்தை பிடிக்கும் வரை ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் மாவட்ட வனத்துறை அலுவலர் மகேந்திரன் கேட்டுக்கொண்டார்.
மேலும் சிறுத்தை பிடிக்க ஓசூரில் இருந்து மூன்று குழுக்களும் சேலத்தில் இருந்து மூன்று குழுக்களும் திருப்பத்தியில் இருந்து ஐந்து குழுக்களும் அடங்கிய 50 பேர் கொண்ட குழுவினர் சிறுத்தை பிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் இன்னும் சிறிது நேரத்தில் சிறுத்தையை பிடித்து விடுவோம் என மாவட்ட வனத்துறை அலுவலர் மகேந்திரன் செய்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலத்திலும் பரபரப்பு: பின்னர், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் சேர்த்துள்ளனர். சம்பவ இடத்திற்கு அருகே CIC , YMCA தோன்மிக்சாவியோ, உள்ளிட்ட பள்ளிகள் உள்ளதால் பள்ளியில் உள்ள குழந்தைகளை பாதுகாப்பாக வெளியே விடாமல் பள்ளியிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல, சேலம் மாவட்டம் காடையாம்பட்டி மற்றும் மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 8 மாதமாக அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, டேனிஷ்பேட்டை வனத்துறை அதிகாரிகள், கேமரா பொருத்தி கண்காணித்தும், சிறுத்தை குறித்த தடயம் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், மலை பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடு, மாடுகள் மர்மமாக இறந்து கிடந்தன.
கடந்த மாதம் எலத்தூர், ராமசாமிமலை, குண்டுக்கல் ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக, மக்கள் தெரிவித்து வந்தனர். அங்குள்ள நாயையும், ஆட்டையும் சிறுத்தை கடித்து சாப்பிட்டது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, சக்கரை செட்டிப்பட்டி கிராமத்தில் பட்டிக்குள் புகுந்து 6 ஆடுகளை அடித்து சாப்பிட்டது.
இதற்கிடையே, 6 மாதத்திற்கு பிறகு, தற்போது மீண்டும் காருவள்ளி ஊராட்சியில் உள்ள காருவள்ளி கரடு, கோம்பை கரடு பகுதிக்கு வந்த சிறுத்தை, வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் ஒரு மாட்டை அடித்து சாப்பிட்டுள்ளது.
இதையும் படிக்க: Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை; குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் - வனத்துறை எச்சரிக்கை