மேலும் அறிய

SP Velumani DVAC Raid: எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 59 இடங்களில் சோதனை... சிக்கியது என்னென்ன? - முழு விவரம்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வேலுமணி அவரது சகோதரர் அன்பரசன் உள்ளிட்ட 13 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக 58.23 கோடி ரூபாய் சொத்து சேர்த்த விவகாரம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வேலுமணி அவரது சகோதரர் அன்பரசன் உள்ளிட்ட 13 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவருக்கு தொடர்பான 59 இடங்களில் சோதனை நடைபெற்றது

கோவையில் 42, சென்னையில் 7, சேலத்தில் 4, திருப்பூரில் 2 இடங்களில், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கேரளா ஆகிய இடங்களில் தலா ஒரு இடத்தில் என சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், 11.153 கிலோ தங்கம், 118.506 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், கணக்கில் வராத 84 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.  கைப்பேசி, வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிக்கணினி, ஹார்ட் டிஸ்க்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கிரிப்டோ கரன்சிகளில் 34 இலட்சம் ரூபாய் முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

SP Velumani DVAC Raid: எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 59 இடங்களில் சோதனை... சிக்கியது என்னென்ன? - முழு விவரம்

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “திரு.S.P.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி என்பவர் தானி முன்பு தமிழக அரசின் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த போது 26.04.2016 முதல் 15.03.2021 வரையிலான காலத்தில் 12 நபர்களின் துணையுடன், கூட்டு சதி புரிந்து வருமானத்திற்கு அதிகமாக ரூ 58,23,97,052 அளவுக்கு சொத்து சேர்த்ததாக கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் கோவை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண் 5/2022/AC/CB, u/s 120 B IPC, 13 (2) r/w 13 (1) (e) of the Prevention of Corruption Act, 1988 and u/s 13(2) r/w 13(1) (b) of the Prevention of Corruption Act, 1988 as amended in 2018 ன்படி வேலுமணி மீதும் மற்றும் u/s 120 B IPC, 13(2) r/w 13(1) (e) of the Prevention of Corruption Act, 1988 r/w 109 IPC and u/s 12 r/w 13(2) r/w 13(1) (b) of the Prevention of Corruption Act, 1988 as amended in 2018 ன் படி திரு.அன்பரசன், திருமதி.ஹேமலதா, திரு.சந்திரசேகர், திரு.சந்திரபிரகாஷ், திருமதி.கிருஷ்ணவேணி, திருமதி,சுந்தரி, திரு.H.கார்த்திக், திரு.விஷ்ணுவரதன், திரு.சரவணகுமார், ஸ்ரீ மகா கணபதி ஜீவல்லர்ஸ், கான்ஸ்ட்ராமால் குட்ஸ் பிரைவட் லிமிடெட் மற்றும் ஆலம் கோல்டு மற்றும் டயமண்ட்ஸ் பிரைவட் மிமிடெட் மீதும் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இவ்வழக்கு தொடர்பான ஆவணங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 59 இடங்களில் (கோயம்புத்தூர்-42, திருப்பூர் -2, சேலம்-4, நாமக்கல் - 1, கிருஷ்ணகிரி - 1, திருப்பத்தூர்-1, சென்னை - 7 மற்றும் கேரள மாநிலம் ஆனைகட்டி-1) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரால் இன்று (15.3.2022) சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்படி சோதளையில் நகைகள் 11.153 கிலோகிராம், வெள்ளி சுமார் 118.506 கிலோகிராம் மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டும், கணக்கில் வராத பணம் ரூ.84,00,000/-, சான்று பொருட்களான கைப்பேசிகள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடி கணினி, கணினி ஹார்டு டிமங்க்குகள் மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன. மேலும் சுமார் ரூ.34,00,000/- அளவுக்கு பலதரப்பட்ட கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு புலள்விசாரணைாயில் இருந்து வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இருக்கு.!மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
Embed widget