(Source: ECI/ABP News/ABP Majha)
முதல்வர் கொடுத்த உறுதி! உடல் உறுப்பு தானம் செய்த தேனி நபருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!
உடல் உறுப்பு தானம் செய்த தேனி மாவட்டத்தை சேர்ந்த நபருக்கு இன்று அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறுகிறது
இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூரில் உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர் வடிவேலுவிற்கு (37) இன்று அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. இந்த இறுதிச் சடங்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்க உள்ளார். கடந்த 23-ஆம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் வடிவேலு மூளைச்சாவு அடைந்தார். இதனால் அவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.
மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “உடல் உறுப்பு தானம் செய்த நபருக்கு அரசு மரியாதை செலுத்த தேனி செல்கிறோம். இன்று முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது என்றார்.
முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், "உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.
குடும்ப உறுப்பினர்கள், மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.
— M.K.Stalin (@mkstalin) September 23, 2023
குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும்…
மேலும் படிக்க,
Dalai Lama: ”சீனாவிடமிருந்து சுதந்திரம் வேண்டாம்; ஆனால்...” - திபெத் விவகாரத்தில் தலாய் லாமா கறார்!
Asian Games 2023 Live: ஆசிய விளையாட்டு போட்டி: 4வது நாளில் களமாட தொடங்கிய இந்திய வீரர், வீராங்கனைகள்