மேலும் அறிய

Mettur Dam: நெருங்கும் கோடை காலம்! மேட்டூர் அணையின் தற்போதைய நீர் நிலவரம் என்ன?

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 4,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடியாக குறைந்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 78 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 90 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 90 கன அடியாக அதிகரித்துள்ளது. 

Mettur Dam: நெருங்கும் கோடை காலம்! மேட்டூர் அணையின் தற்போதைய நீர் நிலவரம் என்ன?

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 60.77 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 25.26 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 4,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam: நெருங்கும் கோடை காலம்! மேட்டூர் அணையின் தற்போதைய நீர் நிலவரம் என்ன?

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 87.89 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 14.71 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 130 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 751 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 48.57 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 10.52 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 65 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
Savitri Jindal: ஹரியானா தேர்தல், நாட்டின் பணக்கார பெண்ணை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக..! சாவித்ரி ஜிண்டால் செய்தது என்ன?
Savitri Jindal: ஹரியானா தேர்தல், நாட்டின் பணக்கார பெண்ணை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக..! சாவித்ரி ஜிண்டால் செய்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLANArun IPS Transfer Order : 24 INSPECTOR-கள் TRANSFER..ஒரே நேரத்தில் பறந்த ஆர்டர்! அருண் IPS வார்னிங்!Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
Savitri Jindal: ஹரியானா தேர்தல், நாட்டின் பணக்கார பெண்ணை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக..! சாவித்ரி ஜிண்டால் செய்தது என்ன?
Savitri Jindal: ஹரியானா தேர்தல், நாட்டின் பணக்கார பெண்ணை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக..! சாவித்ரி ஜிண்டால் செய்தது என்ன?
Yercaud Floating Restaurant: ஏற்காட்டில் மிதவை உணவகம்... அமைச்சர் ராஜேந்திரன் கொடுத்த அப்டேட்
ஏற்காட்டில் மிதவை உணவகம்... அமைச்சர் ராஜேந்திரன் கொடுத்த அப்டேட்
Breaking News LIVE 5th OCT 2024: சென்னையில் பரவலாக பெய்யும் மழை..
Breaking News LIVE 5th OCT 2024: சென்னையில் பரவலாக பெய்யும் மழை..
Indian Israel Army: இஸ்ரேலால் அதிகரிக்கும் போர் பதற்றம் - இந்தியாவின் ராணுவ பலத்தை தாங்குமா? வெற்றி யாருக்கு?
Indian Israel Army: இஸ்ரேலால் அதிகரிக்கும் போர் பதற்றம் - இந்தியாவின் ராணுவ பலத்தை தாங்குமா? வெற்றி யாருக்கு?
”விஜய்க்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ்?” தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்க திமுக திட்டம் ?
”விஜய்க்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ்?” தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்க திமுக திட்டம் ?
Embed widget