(Source: ECI/ABP News/ABP Majha)
நம்பிக்கை துரோகி என்றால் அது எடப்பாடி பழனிச்சாமிதான் - அண்ணாமலை பதிலடி
2026 சட்டமன்ற தேர்தலின் போதும் சட்ட ஒழுங்கு சரி இருக்காது, அப்பொழுதும் எடப்பாடி பழனிசாமி புறக்கணித்து விட்டு ஒதுங்கிக்கொள்வாரா - அண்ணாமலை
விழுப்புரம் Viluppuram : விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் விக்கிரவாண்டி தொகுதி முழுவதும் அரசியல் கட்சியினர் பிரச்சார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தேசிய ஜநாயக கூட்டணி கட்சி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி. அன்புமணி ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திருவாமாத்தூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் பிரசாரத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை...
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதற்கு முன்பு ஜாதி வாரி நடத்துவதற்காக இருந்த குலசேகரன் கமிஷனுக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை, பீகாரில், கர்நாடகாவில் ஜாதிவாதி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, அங்கு அங்கீகாரம் இருந்தது, அதனால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மற்ற மாநிலங்கள் அங்கீகாரம் இருப்பதன் காரணமாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகிறது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருந்து விட்டு அதனை மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறுவது ஏன்?
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு திமுக அரசுக்கு மனம் இல்லை
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தயாரா என முதல்வர் ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தயாராக இல்லை, அதனால் பல்வேறு காரணகளை கூறி மழுப்பி வருகிறார். மற்ற மாநிலங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பின் போது யாரும் தடை விதிக்கவில்லை, தமிழகத்திற்கு மட்டும் எப்படி மத்திய அரசு தடை விதிக்க முடியும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு திமுக அரசுக்கு மனம் இல்லை.
அதிமுகவை சில தலைவர்கள் சுய லாபத்திற்காக அழித்து வருகிறார்கள்
அதிமுகவை சில தலைவர்கள் சுய லாபத்திற்காக அழித்து வருகிறார்கள். சுயலாபத்திற்காகவும், அதிகார வெறிக்காகவும், இரண்டு பேர்களை வைத்து பத்திரிக்கையாளர்களிடம் பேசவைத்து அதிமுகவைக் காப்பாற்ற வேண்டும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கனவு கண்டு வருகிறார். அதிமுக தொண்டர்கள் எல்லாம் மாற்று கட்சி நோக்கி படையெடுத்து வருகிறார்கள். நம்பிக்கை துரோகி என்கின்ற ஒரு வார்த்தை பொருந்தும் என்றால் அது எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டும் பொருந்தும், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதனால் தான் பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழந்தது. அதிமுக கட்சி நன்றாக இருந்தாலும் தற்போது இருக்ககூடிய தலைவர்கள் சரியில்லை.
விக்கிரவாண்டி இடை தேர்தலில் சட்டம் ஒழுங்கு சரியில்லாத காரணத்தால் விலகுவதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலின் போதும் சட்ட ஒழுங்கு சரி இருக்காது, அப்பொழுதும் எடப்பாடி பழனிசாமி புறக்கணித்து விட்டு ஒதுங்கிக்கொள்வாரா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து கரைய ஆரம்பித்து தேசிய கட்சிக்கு வர ஆரம்பித்துள்ளனர்.