மேலும் அறிய

AIADMK: அதிமுக அலுவலக சாவி வழக்கு.. மீண்டும் சறுக்கிய ஓபிஎஸ்.. உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி..!

அதிமுக தலைமை அலுவலக சாவியை ஈபிஎஸ்க்கு வழங்கியதை எதிர்த்த ஓபிஎஸ் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

அதிமுகவின் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் எவ்வாறு உரிமை கோருகிறார்..? மீண்டும் உரிமையியல் வழக்கு தொடர்ந்து அதிமுக அலுவலகத்தை மீட்க சட்ட வழியாக நாடலாமா..? என ஓபிஎஸ் தரப்புக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது. 

கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஆதரவாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது.

இதையடுத்து அதிமுக அலுவலகத்திற்கு வருவாய்துறையினர் சீல் வைத்தனர். இதை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தொடர்ந்து செயல்படலாம் என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீடு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் ஒரு வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் மட்டுமே அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்றே தமிழ்நாடு அரசு செயல்பட்டது. எனவே ஓபிஎஸ் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதேபோல், எடப்பாடி பழனிசாமி சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. அவர் திட்டமிட்டு வன்முறையை நிகழ்த்தி, அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த ஓ.பி.எஸ். ஆவணங்களை எடுத்து சென்றுவிட்டார் என தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தை முடக்கினால் எப்படி அந்த அரசியல் கட்சி இயங்கும். ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் சுதந்திரமாக இயங்க வேண்டும். இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லும். எனவே ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறோம் என தெரிவித்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!

Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?

இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்

கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..

Spiritual Cities: பக்தி மனம், ஆன்மீகத்தை உணரச் செய்யும்.. இந்தியாவின் மிக முக்கியமான 5 நகரங்கள் - லிஸ்ட் இதோ..!

Embed widget