விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் இன்று முதல் தொடக்கம்!
தமிழகத்தில் முதற்கட்டமாக25 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணையை வழங்கவுள்ளார். மீதமுள்ள 75000 இலவச மின் இணைப்புக்கள் வரும் மார்ச் மாதத்திற்குள் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கும் திட்டம் இன்று முதல் துவங்கவுள்ள நிலையில், முதற்கட்டமாக 25 ஆயிரம் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பிற்கான ஆணையை முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கவுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் திமுக தனது வாக்குறுதியில்,, விவசாயிகளுக்குப் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்திருந்தது. மேலும் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் உடனடியாக விவசாயிகளுக்கான ஒவ்வொரு திட்டமும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி தமிழக சட்டப்பேரவையில் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கான மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவித்தார்.
இதனையடுத்து விவசாயிகள் மின் இணைப்பு வேண்டி பல்வேறு காலக்கட்டங்களில் விண்ணப்பித்து காத்துள்ள நிலையில், யார் யாருக்கும் முதலில் ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் சேர்க்கலாம் என ஆலோசனை நடைபெற்றறது. இந்நிலையில் தான், விவசாயிகளுக்கானப் பட்டியல் தயார் செய்யும் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு மாதத்துக்குள் இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகளை நிறைவு செய்யவும், வருகின்ற மார்ச் மாதத்திற்குள் ஒரு லட்சம் மின் இணைப்புகளை முழுமையாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் 9 மாவட்ட.த்தைச் சேர்ந்த விவசாயிகளுக்குத் தேர்தல் பிறந்த முடிந்தப்பிறகே விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெறும் இந்த விழாவில் 25 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணையை வழங்கவுள்ளார். மீதமுள்ள 75000 இலவச மின் இணைப்புக்கள் வரும் மார்ச் மாதத்திற்குள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு விவசாயிகள் மகிழ்ச்சியோடு நன்றிகளை அரசிற்கு தெரிவித்துவருகின்றனர்.
முன்னதாக, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர், அதிமுக ஆட்சியில் இருந்தப்போது மின்தடை ஏற்பட்டது இல்லை. ஆனால் திமுக ஆட்சிப்பொறுப்பேற்றதும் தமிழகத்தில் தற்போது அடிக்கடி கரண்ட் இருப்பது இல்லை எனவும் மக்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை முறையாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனையடுத்து இதற்குப்பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் இருந்த காலக்கட்டத்தில் துணை மின் நிலையங்களில் எந்த பராமரிப்புப் பணிகளும் ஏற்படவில்லை.எ எனவே ராமரிப்பு பணிகள் பல மாதங்களாக சரிவர நடைபெறாததாலே மின் வெட்டு ஏற்படுவதாக செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.
இன்றைய முக்கியச் செய்திகள் இதோ:
வேலூர் மாவட்டத்தில் வெற்றி பெறப்போவது யார்?
கோயில் நிலத்தில் கிஷ்கிந்தா தீம் பார்க்?
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி
அழகுக்கு அப்பாலும் ஜொலித்தவர் சில்க்!
மாலையில் சஸ்பெண்ட்... இரவில் ரத்து... ஆசிரியை மகாலட்சுமிக்கு நடந்தது என்ன?
மேல்மருவத்தூர் பங்காரூஅடிகளார் மனைவிக்கு இவ்வளவு சொத்தா?