மேலும் அறிய

சிமெண்ட் தெருவையே காணோம் சார்.. கோலியனூரில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு..

கோலியனூர் பகுதியில் 3 தெருக்களில் சிமெண்ட் சாலைகளை காணவில்லை என பொதுமக்கள் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு

விழுப்புரம் அருகே கோலியனூர் பகுதியில் 3 தெருக்களில் சிமெண்டு சாலைகளை காணவில்லை என பொதுமக்கள் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் உள்ள மாரியம்மன் கோவில் தோப்பு தெரு, கோலியனூர் தொடர்ந்தனூர் ஒட்டுத்தெரு, நடுத்தெரு ஆகிய 3 தெருக்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மூலம் ரூ.17 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலைகள் போடுவதற்காக 2021-2022-ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு செய்யபட்டு அந்த இடங்களில் சிமெண்டு சாலைகள் அமைக்கப்படுவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.

Cuddalore: பாழடைந்த வீடு.. காதலன் கண் முன்னே கடலூரில் நடந்த கொடூரம்
சிமெண்ட் தெருவையே காணோம் சார்.. கோலியனூரில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு..

Supriya Sule Latest | ‘இதுதான் அரசியல்’... பாய்ண்ட்டுகளை அடுக்கிய சுப்ரியா சூலே | Parliament Speech

இந்நிலையில் மேற்கண்ட 3 தெருக்களிலும் சிமெண்டு சாலைகள் அமைக்கப்படாமலேயே சாலை போடப்பட்டதாக  கல்வெட்டுகளை வைத்து திட்ட மதிப்பீடு எவ்வளவு நாட்களில் முடிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளனர். இதனையறிந்ததும் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் சாலை போடாமலேயே போடப்பட்டதாக எவ்வாறு கல்வெட்டு அமைக்கலாம் என்று ஊராட்சி செயலாளரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், தனக்கு எதுவும் தெரியாது எனக்கூறியுள்ளார்.

Raja Kannappan | அடுத்தடுத்த சர்ச்சைகள்.. ராஜ கண்ணப்பனை மாற்றிய முதல்வர் | MK Stalin | Transport
சிமெண்ட் தெருவையே காணோம் சார்.. கோலியனூரில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு..

Ma Subramanian Speech: வீடு தேடி மருத்துவம் கியூபாவில் கூட கிடையாது.. அமைச்சர் மா.சு மாஸ் பேச்சு

இதனையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து தங்கள் ஊரில் போடப்பட்ட 3 சிமெண்ட் சாலைகளையும் காணவில்லை என கோலியனூர் பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். அந்த சுவரொட்டிகளில் சாலை பணியில் முறைகேட்டில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி பொறுப்பாளர்கள் மீது தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தனர். சிமெண்டு சாலையை காணவில்லை என பொதுமக்கள் சுவரொட்டி ஒட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget