சட்டு.. சட்டுனு வேலை முடியணும்.. வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆய்வு.. ஆட்சியர்களுக்கு அமைச்சரின் அதிரடி உத்தரவு!
வட்டாட்சியர் அலுவலங்களில் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்
தமிழ்நாட்டில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உத்திவிட்டுள்ளார். வட்டாட்சியர் அலுவலகங்களில் மக்களின் சேவைகளை தணிக்கை செய்யுமாறு அமைச்சர் உத்திரவிட்டுள்ளார். நேற்று முதல்வர், கிண்டி வாட்டாட்சியர் அலுவலகத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்டதை அடுத்து வருவாய்த்துறை அமைச்சர் இந்த உத்தரவை அறிவித்துள்ளார்.
நேற்று முதல்வர் ஆய்வு..
கிண்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு தேவையான பட்டா, சாதி சான்றிதழ்கள் தாமதமின்றி தரப்படுகிறதா என்பதைக் கேட்டறிந்தார். மேலும் இசேவை மையத்திற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அந்த மையத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
எந்தெந்த சேவைகளுக்கு எவ்வளவு நாட்கள் எடுக்கப்படுகிறது? பொதுமக்களின் கோரிக்கைகள் எத்தனை நாட்களில் சரி செய்யப்படுகிறது என்ற விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதன்பின்னர் வாட்டாட்சியர் அலுவலகம் வந்து வருகை பதிவேடு மற்றும் இதர பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும், வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வருகை தந்த பொதுமக்களிடம் அரசின் சேவைகள் குறித்தும், அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
உத்தரவு..
வட்டாட்சியர் அலுவகத்தில் ஆய்வு மேற்கொண்ட பிறகு அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்ததாகவும் தெரிகிறது. அதன்படி, அரசின் முக்கியமான துறையாக விளங்கும் இதன் சேவை இன்றியமையாதது. எனவே பொதுமக்களின் சான்றிதழ்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். குறிப்பாக மாணவர்களின் கல்வித்தேவைக்காக கேட்கப்படும் சான்றிதழ்கள் உடனுக்குடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
நேற்று ஆய்வு இன்று உத்தரவு..
முதல்வர் கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு செய்த நேற்றைய தினமே சென்னை ஆட்சியரும் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து ஆட்சியரின் மாற்றத்துக்கு பின்னணியில் முதல்வரின் ஆய்வு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில்தான், தமிழ்நாட்டில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு இன்று அனைத்து ஆட்சியர்களுக்கும் வருவாய்த் துறை அமைச்சர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
3 மணி நேரத்தில் ரூ.31 ஆயிரம் கோடியில் திட்டங்கள்: பிரதமரின் ‛சுனாமி விசிட்’ குறித்தோர் பார்வை!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்