TN Rain Alert: தமிழ்நாட்டில் நீடிக்கும் மழை.. 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. சில்லென்ற வானிலை நிலவரம் இதோ..
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
31.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
01.06.2023 மற்றும் 02.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
03.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
வேப்பூர் (கடலூர் மாவட்டம்) 9, காட்டுமயிலூர் (கடலூர் மாவட்டம்) 8, கில் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம்) தலா 7, கலசப்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) 6,மூலனூர் (திருப்பூர் மாவட்டம்), பெலாந்துறை (கடலூர் மாவட்டம்) தலா 5, துறையூர் (திருச்சி மாவட்டம்), அவலூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம்), செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்), துவாக்குடி (திருச்சி மாவட்டம்) தலா 4, பெரியநாயக்கன்பாளையம் (கோவை மாவட்டம்), சிறுகுடி (திருச்சி மாவட்டம்), திருப்பூர் தெற்கு, லால்குடி (திருச்சி மாவட்டம்), வத்தளை அணைக்கட் (திருச்சி மாவட்டம்), சமயபுரம் (திருச்சி மாவட்டம்), கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி மாவட்டம்) தலா 3, கிராண்ட் ஆனைகட் (தஞ்சாவூர் மாவட்டம்), நல்லதங்கல் நீர்த்தேக்கம் (திருப்பூர் மாவட்டம்), திருச்சி விமான நிலையம், கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்), ஓடன்சத்திரம் (திண்டுக்கல் மாவட்டம்), ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம்), மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருப்பூர், வால்பாறை பிஏபி (கோவை மாவட்டம்), கிருஷ்ணராயபுரம் (கரூர் மாவட்டம்), வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை மாவட்டம்), புதுச்சத்திரம் (நாமக்கல் மாவட்டம்), திருப்பூர் (திருப்பூர் மாவட்டம்), நெடுங்கல் (கிருஷ்ணகிரி மாவட்டம்), அன்னூர் (கோவை மாவட்டம்) தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
31.05.2023: இலட்சதீவு பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
01.06.2023 முதல் 03.06.2023: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.