மேலும் அறிய
Advertisement
தர்மபுரி : மக்கள் எதிர்பார்த்த ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் : வெறிச்சோடிய ஒகேனக்கல் !
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தடை விதித்ததால், ஆடிப்பெருக்கு விழாவில் வெறிச்சோடியது ஒகேனக்கல்.
ஆடி மாதம் பதினெட்டாம் நாள் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரி ஆறு பெருக்கெடுத்து ஓடுவதை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் வருகை புரிவார்கள். மேலும் ஆடிப்பெருக்கு அன்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் புதுமண தம்பதிகள் காவிரியில் புனித நீராடி புத்தாடை உடுத்தி, அங்குள்ள காவிரி அம்மனை வழிபடுவது வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஒகேனக்கல் வருவதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து ஒகேனக்கல் சுற்றுலா தளம் பொதுமக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இங்கே சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் வரத்தும் சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆடிப்பெருக்கு விழா ஆண்டுதோறும் ஒகேனக்கலில் 3 நாட்கள் நடைபெறும் அரசு விழாவாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆடிப்பெருக்கு விழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - அழுகிய மீன் 500 கிலோ... கெட்டுப் போன 50 ஆயிரம் ஆவின் பால் பாக்கெட்! ஒரே நேரத்தில் இரு நாற்றங்கள்!
தொடர்ந்து ஒகேனக்கல் வருபவர்களை தடுக்க பென்னாகரம்-ஒகேனக்கல் சாலையில் 3 இடங்களில் சோதனை சாவடி அமைத்து காவல் துறையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காவிரிக்கு வாகனங்கள், இருசக்கர வாகனங்களில் வரும் பொதுமக்களை தடுத்து அனுமதி இல்லை என கூறி காவல் துறையினர் திருப்பி அனுப்புவிடுகின்றனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை மீனாட்சியம்மன் கோவில் காலண்டர்: புதிய ஒப்பந்தம் அறிவிப்பு!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion