மேலும் அறிய

“50 ஆண்டு கால ஏமாற்றம்; இந்தியாவே ஏற்கிறது; தமிழ்நாடு மறுக்கிறது” - ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு..

தமிழகத்தில் திராவிட ஆட்சியில் கடந்த 50 ஆண்டுகாலமாக மக்கள் ஏமாற்றப்பட்டு உள்ளனர் என காசி தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சியின் பாராட்டு விழாவில் ஆளுநர் கூறியுள்ளார்.

காசியில் நடந்த தமிழ்ச்சங்கம நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று பாராட்டு விழா நடந்தது. அதில் கவர்னர் ஆர்.என்.ரவி அனைவரையும் வாழ்த்தி பேசினார்.

அப்போது அவர்,  “காசி தமிழ்ச்சங்கம நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கலந்துகொண்ட அனைவரும், அடுத்த 25 ஆண்டுகளில் விஷ்வ குரு என்ற இலக்கை அடைவதற்காக பிரதமர் கொண்டுவந்துள்ள தொலைநோக்கு பார்வையை எடுத்துச்செல்ல வேண்டும். காசி தமிழ்ச்சங்கம நிகழ்ச்சியை ஒரு வரலாற்று நிகழ்வாக மாற்றிய உங்கள் அனைவருக்கும் நன்றி. அரசு எந்திரத்துடன் இணைந்து இந்த நிகழ்வை மிகச்சிறப்பாக நடத்தியிருக்கிறீர்கள்.

தமிழகத்தில் நிலவும் சில தவறான மற்றும் எதிர்மறையான அணுகுமுறைகளை ஒழிக்க வேண்டும். சமுதாயத்தில் அனைத்து மக்களுக்கும் பலனளிக்கக் கூடிய கல்வி உள்ளிட்ட அம்சங்களை தங்களுடைய சொந்த காரணங்களுக்காக மறுக்கும் அரசியல், வருத்தத்தை அளிக்கிறது.  

50 ஆண்டுகளாக.... இந்தியா என்பது ஒரே நாடாக இருந்து வருகிறது.  ஆனால் அதனை சிலர் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் அமெரிக்காவை போல் பார்க்கின்றனர். அது தவறான விஷயம்.  இந்தியா முழுவதும் செல்லுபடியாகும் சில அம்சங்களை தமிழகம் மட்டும் ஏற்க மறுக்கிறது. இது தொடர்பாக தவறான கருத்துகள் கூறப்பட்டுள்ளது. இதில் உண்மை வெளிவர வேண்டும். பாரத தேசத்தின் கீழ் நாம் அனைவரும் ஒன்றே. தமிழகத்தில் திராவிட ஆட்சியில் கடந்த 50 ஆண்டுகாலமாக மக்கள் ஏமாற்றப்பட்டு உள்ளனர்” எனப் பேசினார். 

தமிழகத்தில் ஆளுநரை திரும்பப்பெறக்கோரி போராட்டங்கள், கையெழுத்து  இயக்கம் என பல முயற்ச்சிகளை மெற்கொண்டு வருகின்றனர். ஆளுநர் ஆர்.என் ரவி தமிழகத்தில் பொறுப்பேற்றதிலிருந்தே தொடர் பிரச்சனை நீடித்து வருகிறது. ஆளுநரும் கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் ” ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்ப் போல செயல்பட முடியாது” என கூறினார். தொடர்ந்து தமிழக அரசிற்கும் ஆளுநருக்கும் கருத்து வேறுபாடுகல் நிலவி வருகிறது.

சமீபத்தில் திமுக எம்.பி கனிமொழி ஒரு நிகழ்ச்சியின் போது  “பாஜக எங்கு ஆட்சியில் இல்லையோ அங்கெல்லாம் ஒரு கவர்னரை போடுறாங்கிறார்கள். அந்த கவர்னர், தான் ஒரு கவர்னர் என மறந்துவிட்டு, ஏதோ கட்சியில் இருக்கக்கூடியவர்கள் மாதிரி மேடைக்கு மேடை முழங்கிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த நிலை பேராசிரியர் அன்பழகன் நாடாளுமன்றத்தில் இருந்த பொழுது கூட இருந்திருக்கிறது. அதனாலதான் அவர் அப்பொழுதே பதிவு செய்திருக்கிறார். அதாவது, மாநிலத்தில் ஆட்சியில் இருக்க கூடியவர்களை ஒடுக்குவதற்காக கட்சி சார்பில் சில பேரை கொண்டு வந்து கவர்னராக நியமிக்கிறார்கள் எனக் கூறியுள்ளார்” எனத் தெரிவித்தார். 

மேலும், “ஆன்லைன் ரம்மி தடை செய்ய ஆளுநரிடம் கோரிக்கை வைத்தால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க சென்னால் அவர் காலம் தாழ்த்தி வருகிறார். பல முறை சட்ட அமைச்சர் ஆளுநரை சந்தித்தும் தற்போது வரை கவர்னர் ஒப்புதல் அளிக்காததற்கு என்ன காரணம்?  மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய கூடாது என ஆளுநரை நியமித்துள்ளார்கள். இந்தி எதிர்ப்பு இன்னும் நீர்த்து போகவில்லை... சூடு சொரணை இருப்பவர்களுக்கு இந்தி எதிர்ப்பு குறையாது என பேசியவர் பேராசிரியர். திரடவிட ஆட்சி என்ன செய்தது என கேள்வி எழுப்பி வருகிறார்கள், தமிழகம் தற்போது வளர்ந்து பாதையில் இருக்கிறது. மருத்துவம் கல்வியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இதுதான் திராவிட மாடல்” எனக் கூறியிருந்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND-PAK PM: ”77 வருடங்களை வீணடித்த இந்தியா - பாகிஸ்தான், பழச புதைச்சிடலாமே” - நவாஸ் ஷெரிஃப்
IND-PAK PM: ”77 வருடங்களை வீணடித்த இந்தியா - பாகிஸ்தான், பழச புதைச்சிடலாமே” - நவாஸ் ஷெரிஃப்
உத்தரபிரதேச இடைத்தேர்தல்; காங்கிரஸ் - சமாஜ்வாதி இடையே வலுக்கும் மோதல் - காரணம் என்ன?
உத்தரபிரதேச இடைத்தேர்தல்; காங்கிரஸ் - சமாஜ்வாதி இடையே வலுக்கும் மோதல் - காரணம் என்ன?
TN Rain Alert: சென்னை டூ செங்கல்பட்டு - ”டமால் டுமீல்” இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன்
TN Rain Alert: சென்னை டூ செங்கல்பட்டு - ”டமால் டுமீல்” இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன்
Breaking News LIVE 18th OCT 2024: பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்
Breaking News LIVE 18th OCT 2024: பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND-PAK PM: ”77 வருடங்களை வீணடித்த இந்தியா - பாகிஸ்தான், பழச புதைச்சிடலாமே” - நவாஸ் ஷெரிஃப்
IND-PAK PM: ”77 வருடங்களை வீணடித்த இந்தியா - பாகிஸ்தான், பழச புதைச்சிடலாமே” - நவாஸ் ஷெரிஃப்
உத்தரபிரதேச இடைத்தேர்தல்; காங்கிரஸ் - சமாஜ்வாதி இடையே வலுக்கும் மோதல் - காரணம் என்ன?
உத்தரபிரதேச இடைத்தேர்தல்; காங்கிரஸ் - சமாஜ்வாதி இடையே வலுக்கும் மோதல் - காரணம் என்ன?
TN Rain Alert: சென்னை டூ செங்கல்பட்டு - ”டமால் டுமீல்” இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன்
TN Rain Alert: சென்னை டூ செங்கல்பட்டு - ”டமால் டுமீல்” இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன்
Breaking News LIVE 18th OCT 2024: பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்
Breaking News LIVE 18th OCT 2024: பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்
"எனக்கு பரீட்சை இருக்கு! நான் வரல" +2 தேர்வுக்காக நியூசி. தொடரில் இருந்து விலகிய இந்திய கிரிக்கெட் பிரபலம்!
TN Rain Alert: சென்னையில் மழை, 6 மாவட்ட மக்களே தயாரா..! கொட்டி தீர்க்கப்போகும் கனமழை - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
TN Rain Alert: சென்னையில் மழை, 6 மாவட்ட மக்களே தயாரா..! கொட்டி தீர்க்கப்போகும் கனமழை - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
Hamas Israel: ”ஹமாஸ் தலைவரை கொன்றுவிட்டோம், ஆனால் போரை நிறுத்தமாட்டோம்” - இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு
Hamas Israel: ”ஹமாஸ் தலைவரை கொன்றுவிட்டோம், ஆனால் போரை நிறுத்தமாட்டோம்” - இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு
காவல் நிலையம் அருகே வெடித்து சிதறிய மர்ம பொருள்.. மாமல்லபுரத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..
காவல் நிலையம் அருகே வெடித்து சிதறிய மர்ம பொருள்.. மாமல்லபுரத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..
Embed widget