கரூர்: மீனவர்களின் வாழ்வு உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்குமா? - பொதுமக்கள் கேள்வி
தட்பவெட்ப நிலைக்கு நன்கு வளரக்கூடிய மீன்களான கட்லா, ரோகு, மிர்கால், சிசி புல் கெண்டை, நாட்டுவிரால் மீன்களை அதிக அளவில் உற்பத்தி செய்து, இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
![கரூர்: மீனவர்களின் வாழ்வு உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்குமா? - பொதுமக்கள் கேள்வி the government should take steps to improve the lives of fishermen கரூர்: மீனவர்களின் வாழ்வு உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்குமா? - பொதுமக்கள் கேள்வி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/10/301c5dcc86a3f04697e4a369534acde91665394045969183_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இயற்கையின் கொடையால் அளவில், இந்தியா எல்லா செல்வமும் உள்ள ஒரு நாடாகும். இதன் அடிப்படையில் தமிழகத்தில் ஏராளமான ஆறுகளும், மலைகளும், ஏரிகளும் அமைந்துள்ளன. இதன் அடிப்படையில் விவசாயத்தோடு சேர்ந்த தொழிலான கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, பால் பண்ணை ஆகிய தொழில்களில் இதோடு தொடர்புடைய மேலும் டெல்டா பகுதிகளில் மற்றும் ஏராளமான நீர் நிலைகளிலும் மற்றும் தனிநபர்கள் நீர் உடைகள் அமைத்து பெருக்கும் வகையில், நமது தட்பவெட்ப நிலைக்கு நன்கு வளரக்கூடிய மீன்களான கட்லா, ரோகு, மிர்கால், சிசி புல் கெண்டை, நாட்டுவிரால் மீன்களை அதிக அளவில் உற்பத்தி செய்து, இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா மற்றும் வளர்ப்பு மீன்களை விரும்பி இன்னும் பகுதிகளுக்கு லாரிகள் மூலம், கண்டெய்னர் மூலம் அனுப்பப்படுகிறது.
அதே சமயம் கண்மாய்களைச் சுற்றியுள்ள மாயனூர் வாங்கல் நெரூர் ஆகிய பகுதிகளில் காவிரி ஆற்றுப்பகுதியில் மீன் தொழிலை நம்பி உள்ளவர்கள் உணவுக்காகவும், மீன்களை விற்பனை செய்வதற்காகவும், வலைமூலம் வீசி மீன்பிடிக்கின்றனர். அதே சமயம் கரூர் ஆண்டாங் கோவில் பகுதியில் உள்ள அமராவதி ஆறு மற்றும் கோயம்பள்ளி ராஜபுரம் பிரிவு அமராவதி ஆற்றில் போதிய அளவு மீன் கிடைப்பதில்லை. ஆழமான பகுதியில் கண்டெடுத்து அதில் நன்கு வளரக்கூடிய மேலே குறிப்பிட்டுள்ள கட்லா, ரோகு, மிர்கால் மற்றும் புல் கெண்டை ஆகிய மீன்களை மீன் வளர்ப்பு துறை மூலமாக மீன்களை வாங்கிவிட்டு அதனை குத்தகைக்கு விடும் அல்லது வலைகளை விரித்து மீன்களை பெரிய மீன்கள் அறிந்த பின் ஏலம் விடலாம். இதே முறையை தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நீர் தேக்கங்களில் மீன்வளத்துறை அதிகாரிகள் செயல்படுத்துகின்றனர்.
எனவே கரூர் பகுதியிலும் மழைக்காலங்களில் மற்றும் ஓரளவு தண்ணீர் நிறைந்திருக்கும் பகுதிகளில் மீன் உற்பத்தியை அதிகப்படுத்தும் பொது மக்களுக்கு சத்தான உணவுகள் கிடைப்பதுடன் அந்த மீன் தொழிலை நம்பி வாழ்கின்ற மீனவர்களின் வாழ்வு உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், ஒன்றிய அரசின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் உள்ள கூலி ஆட்களை வைத்து பண்ணை குட்டை பெரிய அளவில் அமைத்து அதில் மீன் வளர்க்க விரும்பும் விவசாயிகளுக்கு பண்ணை குட்டை அமைத்து கொடுத்தால் போதுமான மின் உற்பத்தியை அதிகரிக்க முடியும். மேலும், விவசாயத்திற்கு மாற்று தொழிலாக இது அமைவதால் விவசாயிகளின் வருமானம் உயரும் போது, நாட்டு வருமானமும் உயரும் இதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் மீன் வளர்க்க உகந்த பகுதிகளாக சின்னாண்டாங் கோவில் தடுப்பணை பகுதி, ராஜபுரம் அருகில் உள்ள அமராவதி ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை பகுதியில் லாலாபேட்டை பகுதியில் உள்ள நீர்நிலைகள், நீர் தேக்கங்கள், குளம் அதேபோல் மழைக்காலங்களில் உபரிநீராக செல்லும் வெள்ளநீரை வெள்ளியணை, பஞ்சப்பட்டி, ஜெகதாபி, தாதம்பாளையம், பாளையம் ஏறி ஆகியவற்றில் போதிய அளவு நிரப்பினால் இந்த 4 நீர்நிலைகளை நம்பி ஏராளமான மீன் வளர்ப்பதில் அதிக வருமானத்தை ஈட்ட முடியும். மேலே குறிப்பிட்டுள்ள இந்த 4 நீர் நிலைகள் நிரம்பினால் சுமார் 2000 ஏக்கர், நிலப்பரப்பிற்கு மேல் நீரை சேமிக்க முடியும். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)