Karur: ஊராட்சிப் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்ட கரூர் ஆட்சியர்
கரூர் மாவட்டம்,க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், தென்னிலை மேற்கு மற்றும் கூடலூர் ஆகிய ஊராட்சிப் பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணி
ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் இன்று நேரில் பார்வையிட்டார்.
கரூர் மாவட்டம்,க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், பவித்ரம், சூடாமணி, சின்னதாராபுரம், மொஞ்சனூர், தென்னிலை மேற்கு மற்றும் கூடலூர் ஆகிய ஊராட்சிப் பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் பார்வையிட்டார்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் பவித்ரம் ஊராட்சி, பெரிய தாதம்பாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றியம் 15வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரு.1.05 இலட்சம் மதிப்பீட்டில் சமையல் கூடத்தினை புணரமைக்கும் பணியினையும், தும்பிவாடி பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதி திட்டத்தின் ரு.59 ஆயிரம் மதிப்பீட்டில் சமையல் கூடம் புணரமைக்கும் பணிகளையும், சூடாமணி ஊராட்சி பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்த்தின் கீழ் ரு.1.40 இலட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் புணரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், அதேப்பகுதியில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரு.1.81 லட்சம் மதிப்பீட்டில் நூலகத்தில் சிறிய சமுக சமுதாய சுகாதார வளாகம் புணரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், சின்ன தாராபுரம் ஊராட்சி ,மல்லநத்தம் பகுதியில் பாரத பிரதமர் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரு.2.70 இலட்சம் மதிப்பிட்டில் தனி நபர் வீடு கட்டிவரும் பணிகளயும், கூடலூர் கிழக்கு ஊராட்சி, பனையம்பாளையம் சமத்துவபுரம் வீடுகள் புணரமைக்கும் திட்டத்தின் கீழ் பெரியார் சமத்துவபுரத்தில் உள்ள 78 வீடுகளை தலா ரு. 50000 ஆயிரம் விதம், ரு.3.90 கோடி மதிப்பீட்டில் வீடுகளை புணரமைக்கும் பணிகளையும்,
தென்னிலை மேற்கு பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரு.25.99 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் பணிகள் நடைபெற்று வருவதையும், மொஞ்சனூர் ஊராட்சி, தொட்டம்பட்டி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரு.31.70 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும், மற்றும் அரசு நடுநிலைப் பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரு.58 ஆயிரம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் புணரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை வாணிஈஸ்வரி, உதவி பொறியாளர்கள் இளஞ்சேரன், பூர்ணமாதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, நீலகண்டன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் செல்வி ரவிக்குமார், சொர்ணலதா கார்த்திகேயன், அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.