மேலும் அறிய

8 பேர் உயிரை காவு வாங்கிய ஃபெஞ்சல் புயல் ; அடுத்தடுத்து நிகழும் சோகங்கள்... விழுப்புரத்தில் நிலை என்ன ?

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் மழைக்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 54,250 கோழிகள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

விழுப்புரம்: வங்கக்கடலில் உருவாகி கரையைக் கடந்த ஃபென்ஜால் புயல் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழையால் குடியிருப்புகளில் திங்கள்கிழமை வரை வெள்ளம் வடியாத நிலை காரணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

88 நிவாரண மையங்களில் 5,694 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தரைப்பாலங்களில் மூழ்கியதால் 150-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.ஃபென்ஜால் புயல் கரையைக் கடப்பதற்கு முன்னர் விழுப்புரம் மாவட்டத்தில் பெய்யத் தொடங்கிய மழை (சனிக்கிழமை பிற்பகல்) கரையைக் கடந்த பின்னரும் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை பெய்தது. வரலாறு காணாத அளவுக்கு பெய்த மழையால் மாவட்டம் முழுவதுமே வெள்ளக்காடாக மாறியது.

அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 56 செ.மீ அளவிற்கு அதிகனமழை கொட்டித் தீர்த்தது. அதேபோல் வானூர், மரக்காணம், திண்டிவனம் உள்ளிட்ட இடங்களில் 40 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. விழுப்புரத்தில் வரலாறு காணாத மழைப் பொழிவை அடுத்து, மாவட்டம் முழுவதுமே வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. குடியிருப்புப் பகுதிகளை பெருமளவு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அத்தியாவசிய தேவைக்குக் கூட வெளியே செல்ல முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

 ஃபெஞ்சல் புயல் மழைக்கு இதுவரை 8 பேர் உயிரிழப்பு 

ஒரு கோடி கிராமம், பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் ராமசாமி மகனான சக்திவேல் (45), ஞாயிற்றுக்கிழமை தும்பூர் ஏரியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.மேலும், வளவனூர் காவல் நிலையத்துக்குள்பட்ட தொந்திரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி பா. சிவக்குமார் (50), செல்லாற்றங்கரை ஓடை நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். விழுப்புரம் அயினாம்பாளையம் பகுதியில் வெள்ளநீரில் மூதாட்டி குப்பம்மாள் (70) அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். சாத்தனூர் கிராமத்தில் இரு மூதாட்டிகள் என மாவட்டத்தின் பிற பகுதிகளில் சேர்த்து மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர்

54,250 கோழிகள் பலி:

மாவட்டத்தில் வெள்ளநீர் சூழ்ந்தது, குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது உள்ளிட்டகாரணங்களால் 25 மாடுகள்,14 கன்றுக்குட்டிகள், 58 ஆடுகள் உயிரிழந்தன. இது போல, கோழிப் பண்ணைக்குள் வெள்ளநீர் புகுந்த நிலையில் , மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 54,250 கோழிகள் இறந்தன.

குடியிருப்புக்குள் புகுந்த வெள்ளநீர்

புயல் கரையைக் கடந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை நேற்று நள்ளிரவு திறக்கப்பட்ட நிலையில் 1.70 லட்சம் கன அடி அணையிலிருந்து தென்பெண்ணையாற்றில் பாய்ந்தது. இதனால் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றங்கரையை ஒட்டிய சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் புகுந்து குடியிருப்புகளையும், விளைநிலப் பகுதிகளையும், சாலையையும் பாதித்துள்ளது.

சென்னை - திருச்சி சாலை மார்க்கத்தில் விழுப்புரம் மாவட்ட எல்லைப் பகுதியான அரசூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வெள்ள நீர் பாய்ந்தோடுவதால், சென்னை-திருச்சி இடையேயான சாலைப் போக்குவரத்து முற்றுலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணையாற்று வெள்ள நீர் தளவானூர், திருப்பாச்சனூர் பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தியதால் விக்கிராண்டி - தஞ்சை சாலைப் போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது.

இதனால், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடலில் தென்பெண்ணையாறு கலக்குமிடமான கடலூரிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு,நெல்லிக்குப்பம், முல்லிகிராம்பட்டு, கடலூர் குண்டு உப்பலவாடி, பெரிய கங்கணாங்குப்பம், தாழங்குடா, ஆல்பேட்டை எம்ஜிஆர் நகர், திடீர்குப்பம் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.

தென்பெண்ணை, கோரையாற்றில் வெள்ளம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 4 கிராமங்கள் தனித்தீவாக மாறி உள்ளன. மாரங்கியூர், சேத்தூர், பையூர், கொங்கராயனூர் ஆகிய 4 கிராமங்களும் வெள்ளம் சூழ்ந்து தனித் தீவுகளாயின. 2 ஆறுகளிலும் முழு கொள்ளளவைத் தாண்டி தண்ணீர் செல்வதால் பல கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. பையூரில் மேம்பாலத்துக்கு செல்லும் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை மற்றும் சாத்தனூர் அணை திறப்பு காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்குக் கூட வெளியே செல்ல முடியாமல் மாரங்கியூர், சேத்தூர் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
TN Fishermen Arrest: இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! மீண்டும் மீனவர்கள் 18 பேர் கைது, இலங்கை கடற்படை அடாவடி
TN Fishermen Arrest: இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! மீண்டும் மீனவர்கள் 18 பேர் கைது, இலங்கை கடற்படை அடாவடி
Tiruvannamalai Landslide: திருவண்ணாமலை மண் சரிவு - நிறுத்தப்பட்ட மீட்பு பணி? ஏன் இந்த தாமதம்?
Tiruvannamalai Landslide: திருவண்ணாமலை மண் சரிவு - நிறுத்தப்பட்ட மீட்பு பணி? ஏன் இந்த தாமதம்?
கஞ்சா போதையில் கங்கை அமரன் ரகளை! நைட்டியுடன் அட்ராசிட்டி!
கஞ்சா போதையில் கங்கை அமரன் ரகளை! நைட்டியுடன் அட்ராசிட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”திமுக-னா பல் இளிப்பீங்க விஜய்-னா மட்டும் கசக்குதா?” திருமாவை- விளாசும் தவெக! | TVKJose Charles Profile : ”அடுத்த CM என் பையன் தான்”லாட்டரி மார்டின் ஸ்கெட்ச்!யார் இந்த ஜோஸ் சார்லஸ்? | Lottery MartinDurga Stalin Temple Visit : கொட்டும் மழையில் பால்குடம்.. துர்கா ஸ்டாலின் பரவசம்!சீர்காழியில் சிறப்பு தரிசனம்Vikrant Massey: ”இனி நடிக்க மாட்டேன்”  பிரபல நடிகர் பகீர்  மிரட்டலுக்கு பயந்தாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
TN Fishermen Arrest: இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! மீண்டும் மீனவர்கள் 18 பேர் கைது, இலங்கை கடற்படை அடாவடி
TN Fishermen Arrest: இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! மீண்டும் மீனவர்கள் 18 பேர் கைது, இலங்கை கடற்படை அடாவடி
Tiruvannamalai Landslide: திருவண்ணாமலை மண் சரிவு - நிறுத்தப்பட்ட மீட்பு பணி? ஏன் இந்த தாமதம்?
Tiruvannamalai Landslide: திருவண்ணாமலை மண் சரிவு - நிறுத்தப்பட்ட மீட்பு பணி? ஏன் இந்த தாமதம்?
கஞ்சா போதையில் கங்கை அமரன் ரகளை! நைட்டியுடன் அட்ராசிட்டி!
கஞ்சா போதையில் கங்கை அமரன் ரகளை! நைட்டியுடன் அட்ராசிட்டி!
Telephone Auction: பெருக்கெடுத்த ரத்த ஆறு, இனப்படுகொலை “மரணத்தின் ஆயுதம்” - ஆனால் ரூ.2 கோடிக்கு ஏலம் ஏன்?
Telephone Auction: பெருக்கெடுத்த ரத்த ஆறு, இனப்படுகொலை “மரணத்தின் ஆயுதம்” - ஆனால் ரூ.2 கோடிக்கு ஏலம் ஏன்?
Virat Kohli: 5ம் நம்பர் ஜெர்சியில் விராட் கோலி! ரன் மெஷின் அடிச்ச சிக்சஸரைப் பாருங்க!
Virat Kohli: 5ம் நம்பர் ஜெர்சியில் விராட் கோலி! ரன் மெஷின் அடிச்ச சிக்சஸரைப் பாருங்க!
Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முக்கிய பணியில் இருந்த நபர் தற்கொலை! ஸ்தம்பித்து போன குழு!
Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முக்கிய பணியில் இருந்த நபர் தற்கொலை! ஸ்தம்பித்து போன குழு!
PV Sindhu Wedding: அடடே..! ஒலிம்பிக் சாதனை மங்கை பி.வி. சிந்துவிற்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
PV Sindhu Wedding: அடடே..! ஒலிம்பிக் சாதனை மங்கை பி.வி. சிந்துவிற்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
Embed widget