மேலும் அறிய

மக்களுடன் முதல்வர் திட்டம் இதற்காகத்தான்! - துணை சபாநாயகர் பிச்சாண்டி

மக்களுடன் முதல்வர் திட்டம் கிராமப்புற மக்களின் கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்ற வேண்டுமென்று இத்திட்டத்தினை கிராமப்புறங்களில் தொடங்கி வைத்தார்கள் என துணை சபாநாயகர் கு பிச்சாண்டி பேசினார்.

 தமிழ்நாடு சட்டபேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கரபாண்டியன் முன்னிலையில் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிளியாப்பட்டு ஊராட்சியில் கிளியாப்பட்டு, களஸ்தம்பாடி, சானானந்தல், வள்ளிவாகை, குன்னியந்தல் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயனடையும் வகையில் தனியார்  திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் இன்று  நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

இம்முகாமில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் பேசியதாவது :

தமிழ்நாடு முதலமைச்சர் மூன்று ஆண்டு கால ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கி கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி முதற்கட்டமாக நகராட்சிகளில் இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு பல்வேறு மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டதால் கிராமப்புற மக்களின் கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்ற வேண்டுமென்று இத்திட்டத்தினை கிராமப்புறங்களில் தொடங்கி வைத்தார்கள். அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்கள் நடைபெற்று வருகிறது. இம்முகாம்களில் பொதுமக்கள் அளிக்கின்ற மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்பட்டு அவர்களுக்கு உரிய பதிலளிக்க துறை சார்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மனுக்களை அளித்து ஒப்புகை பெற்றுக்கொண்டால் ஒரு மாதத்திற்குள் அதற்கான தீர்வை மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக அந்த துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை செய்து தருவார்கள் என்றும் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இம்முகாமில் பங்குபெற்று மனுக்களை அளித்து பிரச்சனைகளை தீர்த்து கொள்ள பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி அவர்கள் தெரிவித்தார்.

மக்களுடன் முதல்வர் திட்டம் இதற்காகத்தான்! - துணை சபாநாயகர் பிச்சாண்டி

இச்சிறப்பு திட்ட முகாமில் மகளிர் திட்டம் சார்பாக கிளியாப்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த பாசமலர் மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூபாய் 1 இலட்சத்து 50 ஆயிரம் கடனுதவி பெறுவதற்கான ஆணையினையும் மகிழ்ச்சி மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூபாய் 1 இலட்சம் கடனுதவி பெறுவதற்கான ஆணையினையும் களஸ்தாம்பாடி ஊராட்சியில் உள்ள ஆப்பிள் மற்றும் தங்கம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தலா ருபாய் 50 ஆயிரம் கடனுதவி பெறுவதற்கான ஆணையினையும்  மற்றும் வருவாய்த்துறை சார்பாக 5 பயனாளிகளுக்கு நத்தம்  மற்றும் 1 பயனாளிக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும் தமிழ வழங்கினார்கள். இதன்தொடர்ச்சியாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன்  திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அடிஅண்ணாமலை பகுதியில் உள்ள தனியார் பாலாஜி திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்து முகாமில் மனுக்கள் அளித்த பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 1 பயனாளிக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரம்ரூ 8 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மக்களுடன் முதல்வர் திட்டம் இதற்காகத்தான்! - துணை சபாநாயகர் பிச்சாண்டி

இம்முகாம்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது :

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாமானது 20000 மக்கள் தொகை கொண்ட ஒரு பகுதிக்கு ஒரு முகாம் என்ற அடிப்படையில் நாள்தோறும் ஐந்து முகாம்கள் நடைபெற்று வருகிறது. 15 துறைகளின் கீழாக 44 சேவைகள் வழங்க மனுக்கள் பெற்றுக்கொள்ளப்படுகிறது. அனைத்து மனுக்களும் பதிவு செய்யப்பட்டு மக்களுடன் முதல்வர் முகாமில் இ-சேவை மையத்தில் பதிவு செய்யப்படும் மனுக்களுக்கான கட்டணம் சேவை கட்டணத்தில் 50 சதவீதம் மட்டும் பெறப்படும் எனவும் முகாம்களில் பெறப்பட்ட மனுக்களின் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.
பள்ளி குழந்தைகளை அழைத்து வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் பள்ளி குழந்தைகளுக்கான சாதி சான்றிதழ் அந்தந்த பள்ளிகளிலேயே உள்ள ஆசிரியர்கள் மூலமாக வருவாய்த்துறை அலுவலர்களால் பதிவு செய்யப்படுகிறது. எனவே இந்த முகாமில் அனைவரும் மனுக்கள் அளித்து பயன்பெற வேண்டும் முகாம்களில் பணியாற்றக்கூடிய அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மனு அளிக்க வரும் பொதுமக்களை நல்ல முறையில் அணுகி அவர்களுக்கு உரிய பதில்களை வழங்குவதுடன் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் மேலும் பொதுமக்கள் மனு அளித்தமைக்கான ஒப்புகை சீட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Thiruppavai 19: அழகும் ஆற்றலும் கொண்ட நப்பின்னையே.! கண்ணன் மனைவியை புகழும் ஆண்டாள்...
Thiruppavai 19: அழகும் ஆற்றலும் கொண்ட நப்பின்னையே.! கண்ணன் மனைவியை புகழும் ஆண்டாள்...
One Day College Student: ஒரு நாள் கல்லூரி மாணவியராக மாறிய மகளிர்... சேலத்தில் பெண்கள் நெகிழ்ச்சி.
One Day College Student: ஒரு நாள் கல்லூரி மாணவியராக மாறிய மகளிர்... சேலத்தில் பெண்கள் நெகிழ்ச்சி.
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
Embed widget