மேலும் அறிய

ஆணவ கொலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள் பொது வெளியில் நடத்த வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு..

ஆணவ கொலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள் பொது வெளியில் நடத்தப்பட்டால் தான் பொதுமக்களுக்கு அது சென்றடையும்  என  சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வரும் மார்ச் 12ஆம் தேதி மாலை உடுமலை குமாரமங்கலம் பேருந்து நிலையம் பகுதியில் ஆணவக்கொலை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த சங்கர் சமூக நீதி அறக்கட்டளையின் நிறுவனரான கவுசல்யா மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக கவுசல்யா தாக்கல் செய்த மனுவில், தன்னை சாதி மறுப்பு திருமணம் செய்ததால் தனது கணவரான உடுமலை சங்கர் ஆணவக் கொலை செய்யப்பட்டதை அடுத்து, சாதி மறுப்பு திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூட்டங்கள் நடத்தி வருவதாக கூறியுள்ளார்.

இதன் ஒருபகுதியாக சங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு மார்ச் 12ஆம் தேதி மாலை உடுமலை குமாரமங்கலம் பேருந்து நிலையம் அருகே கூட்டம் நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்ததாகவும், அதற்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு இன்று நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில், சங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த கடந்த 7 ஆண்டுகளாக அனுமதியளிக்கப்படவில்லை எனவும், உள்ளரங்க கூட்டமாக நடத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த கூட்டத்தை நடத்துவதில் தங்களுக்கு விருப்பமில்லை என சங்கரின் சகோதரர் மனு அளித்துள்ளதாகவும், அப்பகுதியில் சங்கரின் உறவினர்கள் உள்ளதாலும், சங்கரின் குடும்பத்தார் மூலம் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பிருக்கலாம் என்பதாலும் அனுமதி அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, ஆணவ கொலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள் பொது வெளியில் நடத்தப்பட்டால் தான் பொதுமக்களுக்கு அது சென்றடையும் என தெரிவித்த நீதிபதி, நினைவேந்தல் கூட்டம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க  காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: தொடர் மௌனம்.. டெல்லியில் சிபிஐ முன் வாயை திறக்கும் விஜய் - சிக்கப்போவது யார்?

Porur Vadapalani Metro: பிப்ரவரி முதல் வடபழனி - போரூர் மெட்ரோ ரயில் சேவை - பூந்தமல்லிக்கு எப்போது? முக்கிய அறிவிப்பு

Crime: நோ சொன்ன டெக்கீ.. வயதை மீறிய காதல், வேலையை காட்டிய டீன் ஏஜர்.. பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Volkswagen Tayron: ஃபார்ட்சுனர் உன்ன நான் அடிக்கிறன்டா..! 7 சீட்டர், டாப் டெக் அம்சங்கள் - டெய்ரோன் SUV எப்படி இருக்கு?

ABP Premium

வீடியோ

Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு
Mamata banerjee on Amitshah | ”சீண்டிப் பார்த்தா அவ்ளோதான்! என்கிட்ட PEN DRIVE இருக்கு” அமித்ஷாவை மிரட்டும் மம்தா
Owaisi vs BJP | ’’முஸ்லிம் பெண் பிரதமாராவார்’’பற்ற வைத்த ஓவைசிகொதிக்கும் பாஜகவினர்
Vijay CBI Enquiry | ‘WITNESS’ to ‘SUSPECT’ !CBI விசாரணையில் TWIST?சிக்கலில் விஜய்?
Pongal Celebration |''பொங்கலோ பொங்கல்’’சமத்துவ பொங்கல் விழா களைகட்டிய தர்மபுரி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: தொடர் மௌனம்.. டெல்லியில் சிபிஐ முன் வாயை திறக்கும் விஜய் - சிக்கப்போவது யார்?
TVK Vijay: தொடர் மௌனம்.. டெல்லியில் சிபிஐ முன் வாயை திறக்கும் விஜய் - சிக்கப்போவது யார்?
Porur Vadapalani Metro: பிப்ரவரி முதல் வடபழனி - போரூர் மெட்ரோ ரயில் சேவை - பூந்தமல்லிக்கு எப்போது? முக்கிய அறிவிப்பு
Porur Vadapalani Metro: பிப்ரவரி முதல் வடபழனி - போரூர் மெட்ரோ ரயில் சேவை - பூந்தமல்லிக்கு எப்போது? முக்கிய அறிவிப்பு
Crime: நோ சொன்ன டெக்கீ.. வயதை மீறிய காதல், வேலையை காட்டிய டீன் ஏஜர்.. பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Crime: நோ சொன்ன டெக்கீ.. வயதை மீறிய காதல், வேலையை காட்டிய டீன் ஏஜர்.. பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Volkswagen Tayron: ஃபார்ட்சுனர் உன்ன நான் அடிக்கிறன்டா..! 7 சீட்டர், டாப் டெக் அம்சங்கள் - டெய்ரோன் SUV எப்படி இருக்கு?
Volkswagen Tayron: ஃபார்ட்சுனர் உன்ன நான் அடிக்கிறன்டா..! 7 சீட்டர், டாப் டெக் அம்சங்கள் - டெய்ரோன் SUV எப்படி இருக்கு?
TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?

Chennai rowdy murder: அதிகாலையில் பயங்கரம்.!அரசு மருத்துவமனைக்குள் ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை- யார் இந்த ஆதி.?
அதிகாலையில் பயங்கரம்.!அரசு மருத்துவமனைக்குள் ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை- யார் இந்த ஆதி.?
IND vs NZ: கோலி மாஸ்.. கே.எல்.ராகுல் கிளாஸ். 2026ஐ வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

Pongal 2026: காலியாகும் சென்னை.. இரண்டே நாளில் 2.50 லட்சம் பேர் ஜுட்! ஹவுஸ்ஃபுல்லாக போகும் பஸ், ரயில்!

Embed widget