விழுப்புரம் : தள்ளுவண்டியில் கிடந்த அடையாளம் தெரியாத சிறுவன் சடலம்: அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்..
விழுப்புரத்தில் 5 வயது சிறுவன் உணவின்றி இறந்ததாக உடற்கூறு ஆய்வில் தெரிய வந்த வழக்கில் இறந்த சிறுவனின் உடலை தோளில் சுமந்தபட்டி இருவர்தூக்கி வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
![விழுப்புரம் : தள்ளுவண்டியில் கிடந்த அடையாளம் தெரியாத சிறுவன் சடலம்: அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்.. The body of a boy in a trolley! The CCTV footage showed the two being carried away and put in a trolley விழுப்புரம் : தள்ளுவண்டியில் கிடந்த அடையாளம் தெரியாத சிறுவன் சடலம்: அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/22/236c9efb2b6a31f3be54eddc51c914ee_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரத்தில் 5 வயது சிறுவன் உணவின்றி இறந்ததாக உடற்கூறு ஆய்வில் தெரிய வந்த வழக்கில் இறந்த சிறுவனின் உடலை தோளில் சுமந்தபடி இருவர்தூக்கி வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேல் தெரு என்ற இடத்தில் சிவகுரு என்பவர் உள்ளார். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரம் நான்கு சக்கர தள்ளுவண்டியில் சலவை தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் கடையை அடைத்து வீட்டுக்கு சென்ற சிவகுரு மீண்டும் அடுத்த நாள் வந்துள்ளார். அப்போது அவர் அங்கு பார்த்தபோது தள்ளு வண்டியில் 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் இருந்துள்ளான். அந்த சிறுவன் தூங்குவதாக நினைத்து அருகில் இருந்தவர்கள் சிறுவனை தட்டி எழுப்ப முயற்சி செய்துள்ளனர்
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ஆனால் சிறுவன் அசைவின்றி கிடந்ததால் அதிர்ச்சி அடைந்து அவர் விழுப்புரம் மேற்கு காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துபார்த்ததில் சிறுவன் சடலமாக இருந்தது தெரியவந்தது.
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் சிறுவனின் புகைப்படத்தை காட்டி விசாரணை மேற்கொண்டதில் அனைவரும் தங்கள் வீட்டு குழந்தை இல்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால் விழுப்புரம் மேற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யாருடைய குழந்தை? விழுப்புரம் பகுதியை சேர்ந்தவரா? அல்லது யாராவது கொலை செய்துவிட்டு தள்ளு வண்டியில் உடலை வீசிச் சென்றனரா என்ற கோணத்திலும விழுப்புரம் மேற்கு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
சிசிடிவி காட்சி
இந்நிலையில் விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்ததில் இரண்டு நபர்கள் இறந்த சிறுவனை தோளில் தூக்கி போட்டு கொண்டு நடந்து வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறுவனை தூக்கி வந்த இரண்டு நபர்கள் யார் என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சிறுவனை தூக்கி வரும் இருவர்களும் வடமாநிலத்தவர்கள் போன்று இருப்பதால் குழந்தையை கடத்தி வந்து சாலையோரங்களில் பிச்சை எடுக்க வைத்து பிழைக்க செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் இருவர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரனை செய்து வருகின்றனர். மேலும் இரு தினங்களுக்குள் குழந்தையை தூக்கி வந்தவர்களை பிடித்து விடுவோம் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. குழந்தையை தூக்கி வந்தவர்கள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் நடந்தே வந்து துணி தேய்க்கும் வண்டியில் போட்டுவிட்டு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரத்தில் 5 வயது சிறுவன் உணவின்றி உயிரிழந்ததாக கூறப்பட்ட சம்பவம்!
— ABP Nadu (@abpnadu) December 22, 2021
இறந்த சிறுவனின் உடலை தோளில் சுமந்தபடி இருவர் தூக்கி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு https://t.co/wupaoCz9iu | #Villupuram pic.twitter.com/2qctEuiA1N
பிரேத பரிசோதனை அறிக்கை:
இது குறித்து எஸ்.பி., ஸ்ரீநாதா கூறுகையில், ”சிறுவனின் உடற்கூராய்வு முடிவடைந்தது. சிறுவன் கொலை செய்யப்படவில்லை. இயற்கையாக இறந்துள்ளார். சிறுவன் குடலில் உணவு மற்றும் தண்ணீர் இல்லை. இதனால், சிறுவன் 2 நாட்கள் உணவு இல்லாமல் இருந்திருக்கலாம். அதன் காரணமாகவும் அவர் இறந்திருக்க வாய்ப்புள்ளது என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)