மேலும் அறிய

தமிழகத்தை முன்னேறிய மாநிலமாக மாற்றி காட்டுவதே லட்சியம் - தஞ்சையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் பேச்சு

’’எந்த நிலத்திலும் வளரும் மரம் என்பதை மகேஷ் பொய்யாமொழி நிரூபித்து காட்டியுள்ளார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்’’

தஞ்சையில் இன்று அரசு சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை மண்ணில் நடக்கும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் சிலையை கோவிலில் நிறுவ கருணாநிதி முயற்சி செய்தார். ஆனால் அப்போதைய மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது. கோவிலுக்குள் தான் சிலை வைக்க கூடாது. கோவிலுக்கு வெளியே வைக்கலாம் என்று ராஜராஜசோழன் சிலையை பெரிய கோவிலுக்கு வெளியே நிறுவியர் கருணாநிதி. மேலும் பெரியகோவில் 1000 மாவது விழா சிறப்பாக நடைபெற்றதும் கருணாநிதி முதல்வராக இருந்தபோது தான்.  இவ்விழாவிற்கு வரும் கருணாநிதி, யாரும் பார்த்திராத வகையில் பட்டு வேட்டி கட்டிக்கொண்டு வந்தார். கருணாநிதியை போராட்ட வீரராக மாற்றி பெரிய தலைவராக மாற்றியதில் தஞ்சைக்கு பெரும் பங்கு உண்டு.

தமிழகத்தை முன்னேறிய மாநிலமாக மாற்றி காட்டுவதே லட்சியம் - தஞ்சையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் பேச்சு

1970 ஆம் ஆண்டு காவிரியில் தண்ணீர் கொடுப்பதில் தமிழகத்திற்கும்,கர்நாடகாவிற்கும் பிரச்சனை வந்த போதே, காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பதை முதன்முதலாக கருணாநிதி தான் எடுத்துரைத்தார்,அதன் வலியுறுத்தி தான் தமிழக சட்டமன்றத்தில் 1971 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதன் தொடர்ச்சியாக தான் 1990 ஆம் ஆண்டு பிரதமாக இருந்த விபி.சிங்கை சந்தித்து, வலியுறுத்தி வற்புறுத்தி காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும் என்று சொன்னவர் கருணாநிதி தான். தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் தர வேண்டும், இடைகால தீ்ர்ப்பையும் பெற்று தந்தவர், அறிவிக்கப்பட்ட தண்ணீரை கர்நாடகா அரசு ஒழுங்காக வழங்குகிறதா என்று கண்காணிப்பு ஆணையத்தை அமைப்பதற்காக 1992 ஆண்டு செய்து கொடுத்தவர் கருணாநிதி தான். காவிரி இறுதி தீர்ப்பும் கருணாநிதி முதல்வராக இருந்த போது 2007 ஆண்டு கிடைத்தது. காவிரி உரிமையை காப்பாற்ற இயக்கம் தான் திமுக.

தற்போது தமிழகத்தில் கொரோனா மெல்ல தலைதூக்க தொடங்கி உள்ளது. வெளிமாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்தாலும் தமிழகத்தில் கட்டுக்குள் தான் உள்ளது. கொரோனா தாக்கம் வந்து விடக்கூடாது என அமைச்சர்கள் நேரு மற்றும் மகேஷ்பொய்யாமொழியை சென்னைக்கு அழைத்து, இன்றைய விழாவை தள்ளி வைக்கலாமா? என்று அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ்பொய்யாமொழி மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினேன். அதற்கு அவர்கள் பாதுகாப்புடன் விழா நடத்தலாம் என்று கூறினார்கள். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே இந்த விழா நடத்த அனுமதி கொடுத்தேன். இருந்தாலும் இன்றைய தினம் 5 ஆயிரம் பயனாளிகளுக்கு மட்டும் நலத்திட்ட உதவி வழங்கப்படும். மீதி உள்ள பயனாளிகளுக்கு இன்னும் 3 நாட்களில் மாவட்ட கலெக்டர் தலைமையில் வீடு தேடி உதவி வழங்கப்படும்.

தமிழகத்தை முன்னேறிய மாநிலமாக மாற்றி காட்டுவதே லட்சியம் - தஞ்சையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் பேச்சு

தஞ்சை மாவட்டத்தில் வழக்கமாக குறுவை சாகுபடி 1 லட்சத்து 6 ஆயிரத்து 250 ஏக்கர் என்ற இலக்கு  அளவிலே இருந்தது.   ஆனால் தற்போது,  1 லட்சத்து 66 ஆயிரத்து 135 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  இது 48 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்த்தப்பட்ட சாதனை. இந்த மாபெரும் சாதனைக்கு அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளும் காரணமாகும்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதியான ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அதற்கு முன்னர் கடைமடை பகுதி தூர்வாருதல் நடந்தது. மானிய விலையில் உரங்கள், 50 சதவீதம் விதை நெல்கள் வழங்கப்பட்டன. தற்போது சம்பா, தாளடி சாகுபடியும் இலக்கை விஞ்சி சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் நெல் சாகுபடி பரப்பை அதிகரிப்பதில் இந்த 6 மாத காலத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளோம்.  2021-2022 சம்பா தாளடிக்கு 3,12,599 இலக்காகும், ஆனால் 342963 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடந்துள்ளது. திமுக அரசு மாபெரும் வேளாண் புரட்சிக்கு அடித்தளம் அமைத்து வருகிறது.

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் கோரிக்கைகள் கவனிப்பதற்கு, துரிதப்படுத்துவதற்கு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நியமித்துள்ளோம். எந்த நிலத்திலும் வளரும் மரம் என்பதை மகேஷ் பொய்யாமொழி நிரூபித்து காட்டியுள்ளார். நுகர்பொருள் வாணிப கழக நெல் கொள்முதலில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊழியர்கள், உதவியாளர்கள் தங்களது ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி கோரிக்கையை ஏற்று பட்டியல் எழுத்தருக்கு ரூ.5255 ஆக ஊதிய உயர்வு வழங்கப்படும்.  உதவியாளர்களுக்கு ரூ.5218  உயர்த்தி, இதில் அகவிலைப்படி ரூ.3499 சேர்த்து இது வழங்கப்படும். இதேப்போல் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கும் மூட்டை ரூ. 3 ரூபாய் 25 பைசாவிலிருந்து  ரூ.10 உயர்த்தி வழங்கப்படும். போக்குவரத்து படியும் உயர்த்தப்படும். இதனால் அரசுக்கு ரூ.83 கோடி கூடுதல் செலவாகும். நெல் மூட்டைகளை கொண்டு வரும் விவசாயிகள், எந்தவிதமான புகார்கள் அளிப்பதற்கு இடம் கொடுக்காதவாறு சேவையாற்றிட வேண்டும்.

தமிழகத்தை முன்னேறிய மாநிலமாக மாற்றி காட்டுவதே லட்சியம் - தஞ்சையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் பேச்சு

தமிழகத்தை முன்னேறிய மாநிலமாக மாற்றி காட்டுவதே லட்சியம். அதனை இலக்காக கொண்டு பயணித்து வருகிறோம். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தற்போது இலக்கை நோக்கிய பயணத்தில் முதல் 6 மாதத்தில் பெரிய வெற்றியை தமிழக அரசு பெற்றுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மக்களை தேடி முதல்வர் முகாமில் பெறப்பட்ட 48 ஆயிரத்து 550 மனுக்களில்,  22 ஆயிரத்து 950 மனுக்களுக்கு அதாவது 50 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளது. மீதம் உள்ள மனுக்கள் பரிசீலித்து தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். முன்னதாக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுக்களை வழங்கினர். கூட்டத்தில் அமைக்கப்பட்ட அரங்கிற்கு சென்று வீணை, தலையாட்டி மொம்மை, நெட்டி வேலைகள், நுால்கள் பார்வையிட்டார்.  இதனை தொடர்ந்து இதனை தொடர்ந்து சரஸ்வதி நுாலகத்திற்கு பார்வையிட்டார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM MK Stalin:
CM MK Stalin: "35 ஆண்டுகால பிரச்சினைக்குத் தீர்வு! 10 ஆயிரம் குடும்பங்கள் பயன்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
Kasthuri:
Kasthuri: "நடிகை கஸ்தூரி மீது பாய்ந்தது வழக்கு" 4 பிரிவுகளில் FIR போட்ட போலீஸ்!
TN Rain Alert: உஷார்! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - உங்க ஊரு வானிலை எப்படி?
TN Rain Alert: உஷார்! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - உங்க ஊரு வானிலை எப்படி?
Amaran: இறுக்கமாகும் துப்பாக்கியின் பிடி! சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற அமரன்!
Amaran: இறுக்கமாகும் துப்பாக்கியின் பிடி! சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற அமரன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Karur BJP Members Join DMK : தட்டித்தூக்கிய செந்தில் பாலாஜி ஷாக்கான அண்ணாமலை ஸ்டாலின் போடும் கணக்குPawan Kalyan Controversy Speech | ’’நிர்வாகம் சரியில்லை!’’பவன் கல்யாண் பகீர்! அதிரும் ஆந்திராTVK Vijay warning cadres | ”கட்சிக்குள் கருப்பு ஆடு”சாட்டையை சுழற்றும் விஜய் கலக்கத்தில் தவெகவினர்Rahul Gandhi slams Modi|’’மோடி BORE அடிக்கிறார்’’இறங்கி அடித்த ராகுல்! பாசமலர்களின் THUGLIFE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin:
CM MK Stalin: "35 ஆண்டுகால பிரச்சினைக்குத் தீர்வு! 10 ஆயிரம் குடும்பங்கள் பயன்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
Kasthuri:
Kasthuri: "நடிகை கஸ்தூரி மீது பாய்ந்தது வழக்கு" 4 பிரிவுகளில் FIR போட்ட போலீஸ்!
TN Rain Alert: உஷார்! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - உங்க ஊரு வானிலை எப்படி?
TN Rain Alert: உஷார்! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - உங்க ஊரு வானிலை எப்படி?
Amaran: இறுக்கமாகும் துப்பாக்கியின் பிடி! சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற அமரன்!
Amaran: இறுக்கமாகும் துப்பாக்கியின் பிடி! சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற அமரன்!
இந்தாண்டு பருவமழை தண்ணீர் எங்கே நிக்குதுன்னு பாக்குறேன் - ஆட்சியர் அதிரடி..!
இந்தாண்டு பருவமழை தண்ணீர் எங்கே நிக்குதுன்னு பாக்குறேன் - ஆட்சியர் அதிரடி..!
மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை; தொல்குடியினர்‌ புத்தாய்வு திட்டம்‌ அறிமுகம்- என்ன தகுதி?
மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை; தொல்குடியினர்‌ புத்தாய்வு திட்டம்‌ அறிமுகம்- என்ன தகுதி?
Breaking News LIVE 5th NOV 2024: 2026ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
Breaking News LIVE 5th NOV 2024: 2026ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
Embed widget